![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2024/02/Delhi-Alipur-Market-Fire-Photo-Credit-@ANI-X-380x214.jpg)
பிப்ரவரி 16, டெல்லி (New Delhi News): புதுடெல்லியில் உள்ள அலிபூர், நரேலா (Narela Market Fire Accident) பகுதியில் சந்தை செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை வேலையில் அப்பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து தீயணைப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக 3 பேர் உயிரிழந்தது உறுதி: கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்த தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்த அதிகாரிகள், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கட்டிடத்திற்குள் சென்று சோதனை செய்தனர். அப்போது, தீயின் பிடியில் சிக்கி முதற்கட்டமாக 3 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்களின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. Women Died: செல்போன் பேசியவாறு தண்டவாளத்தை கடந்த பெண் வழக்கறிஞர், இரயில் மோதி பரிதாப பலி..!
7 பேர் உடல் கருகி பலி: தொடர்ந்து கட்டிட வளாகத்தில் நடந்த சோதனையில், தற்போது வரை மொத்தமாக 7 பேரின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் யார்? என்ற அடையாளம் சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து டி.என்.ஏ மாதிரிகள் சேகரித்து அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Fire bigade reached after 40 mint. pic.twitter.com/oE45f50Tuk
— S.R. Poddar (@iamsrpoddar) February 16, 2024