Udupi Falls Shocking Video: அருவியின் அழகை ரசித்தவாறு வழுக்கி விழுந்து நீரோடு இழுத்து செல்லப்பட்ட இளைஞர்; பதைபதைப்பு வீடியோ லீக்.!

நீர்வீழ்ச்சியில் கால் இடறியதால் இளைஞரின் மனதில் இருந்த மகிழ்ச்சி நொடியில் தடம் தெரியாமல் மாறிப்போன சோகம் நடந்துள்ளது. அதன் பதைபதைப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

Udupi Falls Shocking Video: அருவியின் அழகை ரசித்தவாறு வழுக்கி விழுந்து நீரோடு இழுத்து செல்லப்பட்ட இளைஞர்; பதைபதைப்பு வீடியோ லீக்.!
Udupi Arisina Kundi Falls (Photo Credit: Twitter)

ஜூலை 24, உடுப்பி (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி, கொல்லூர் பகுதியில் அரிசினா குண்டி (Arishina Gundi Falls) உள்ளது. அங்குள்ள பகுதியில் பிரபல சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில், இன்று நீர்வீழ்ச்சிக்கு 23 வயதுடைய இளைஞர் தனது நண்பர்களுடன் குளிக்க சென்ற நிலையில், ஆட்பறித்து வெள்ளம் வரும் நீர்லவீழ்ச்சியில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தார். Orange Alert: குடகு மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை; நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்.!

அப்போது, திடீரென அவரின் கால் இடறிவிடவே, இளைஞரின் தலையில் காயமடைந்து தண்ணீருடன் அடித்து செல்லப்பட்டார். இதனால் அவரின் நண்பர்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இளைஞரை தேடி வருகின்றனர். அவருக்கு என்ன ஆனது? என்ற நிலை இப்போது வரை தெரியவில்லை. இதனால் அவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சோகம் அடைந்துள்ளனர்.

(The above story first appeared on LatestLY on Jul 24, 2023 06:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).