ஜூலை 24, குடகு (Karnataka News): தென்மேற்கு பருவமழையின் காரணமாக இந்தியாவின் வடமாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இன்று மற்றும் நாளை மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா உட்பட பல மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. தேசிய மீட்பு படை அதிகாரிகள் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ள இடங்களில் தயார் நிலையில் இருக்கின்றனர். Leopard Attack: அமைதியாக சென்ற பாதசாரி; திடீரென குறுக்கே பாய்ந்து மரண பீதியை தந்த சிறுத்தை; அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குடகு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் வெங்கட்ராஜ் உத்தரவிட்டு இருக்கிறார்.