Threatening Against PM & UP CM: பிரதமர், உ.பி முதல்வருக்கு கையில் வாளுடன் கொலை மிரட்டல்; வீடியோ பதிவிட்டு அதிர்ச்சி செயல்.!
சமூக வலைத்தளமான முகநூலில் பிரதமர் மோடி மற்றும் உபி முதல்வர் யோகியை காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் கொலை செய்திடுவதாக வீடியோ வெளியிட்ட நபரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
மார்ச் 05, பெங்களூர் (Bangalore News): கர்நாடக மாநிலத்தில் உள்ள யதுகிரி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), உத்திரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் (Yogi Adityanath) ஆகியோரை கொலை செய்துவிடுவதாக சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பிரதமர் மோடியும், உ.பி முதல்வரும் கொல்லப்படுவார்கள் எனவும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.
சர்ச்சை வீடியோ வைரல்: இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, யதுகிரி, சுர்பூர் காவல் நிலையத்தில் பாஜகவினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்ற காவல் துறையினர் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 505(1)(b), 25(1)(b) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். மேலும், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யவும் துரித நடவடிக்கை மேற்கொண்டனர். Case Against TTE: தவறுதலாக இரயிலில் ஏறிய பெண் கொலை முயற்சி; பயணசீட்டு பரிசோதகரின் அதிர்ச்சி செயல்.!
பிரதமர், உபி முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: விசாரணையில், யதுகிரி பகுதியை சேர்ந்த முகம்மத் ரசூல் கட்டரே என்பவர் இவ்வாறான மிரட்டல் விடும் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. சம்பவத்தன்று செல்பி வீடியோ எடுத்த நபர், தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார். உ.பி முதல்வர் யோகிக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய நபரை தேட தனிப்படை அமைப்பு: யதுகிரி மாவட்டத்தை சேர்ந்த முகம்மத், தற்போது கூலித்தொழிலாளியாக ஹைதராபாத்தில் பணியாற்றுவது தெரியவந்துள்ளதால் அவரை தேடி அதிகாரிகள் குழு விரைந்து இருக்கிறது. விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிரட்டல் வீடியோ எமது பக்கத்தில் இணைக்கப்படவில்லை.
(The above story first appeared on LatestLY on Mar 05, 2024 05:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

