மார்ச் 05, பரிதாபத் (Haryana News): ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபத் பகுதியை சேர்ந்தவர் பானா தேவி (வயது 40). இவரின் கணவர் என்.சி.ஆர் சிட்டியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த பிப்ரவரி 29ம் தேடி தேவி தனது 17 வயது மகளுடன் ஜான்சி செல்ல திட்டமிட்டு இருக்கிறார். ஜான்சியில் உள்ள உறவினரின் வீட்டில் நடந்த சுயகரியத்திற்கு அவர் புறப்பட்டு பயணிக்க ஆயத்தமாகி இருந்துள்ளார்.
முதல் வகுப்பு பெட்டியில் ஏறிய பெண்மணி: நள்ளிரவு 12:15 மணியளவில் பரிதாபத் இரயில் நிலையத்திற்கு வந்த திப்ருகர்க் - புதுடெல்லி ராஜதானி அதிவேக விரைவு இரயில் அவர் ஏறி பயணிக்க வேண்டும். அவசரம் மற்றும் இறுதிநேர வருகை காரணமாக, தவறுதலாக ஜஹீலும் விரைவு இரயிலில் ஏறி இருக்கிறார். இரயில் புறப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் பெண்மணி முதல் வகுப்பு ஏசி பெட்டியில் ஏறி படிக்கட்டில் நின்றுள்ளார். இரயில் மெல்ல நகர்ந்தபோது, பயணசீட்டு பரிசோதகர் வந்துள்ளார்.
நிறுத்தப்பட்ட இரயில்: பெண்ணிடம் ஏசி பயணசீட்டு கேட்க, அவர் அவசரத்தில் தான் இப்பெட்டியில் ஏறிவிட்டதாகவும், அடுத்த இரயில் நிலையத்தில் இறங்கி மாறிக்கொள்வதாகவும் கூறியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த பயணசீட்டு பரிசோதகர், பெண்ணை ஓடும் இரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் மற்றும் பயணிகள் கூச்சலிட, இரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. Trichy Shocker: கணவர் விபத்தில் மரணமடைந்ததால் சோகம்; கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த பாசக்கார மனைவி..!
மூட்டு எலும்பு முறிவு: பின் பெண்மணி மற்றும் அவரின் மகள் மீட்கப்பட்டனர். பெண் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு அலறியதால், உடனடியாக அவர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து பெண்மணி தரப்பில் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு, அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்து இருந்தனர்.
பயணசீட்டு பரிசோதகர் மீது வழக்குப்பதிவு: குற்றம் செய்த பயணசீட்டு பரிசோதகர் அங்கிருந்து தப்பி சென்றுவிடவே, அவரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், அவரின் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இரண்டு கால்களும் எலும்பு முறிந்த நிலையில் பெண்மணி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.