Maharashtra Shocker: மதுபோதையில் தாய்க்கு பாலியல் தொல்லை; அண்ணனை இரும்பு ராடால் 18 முறை அடித்தே கொன்ற தம்பி.!

அனுதினமும் போதையில் பிரச்சனை செய்த சகோதரனை நண்பர்கள் உதவியுடன் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

Maharashtra Shocker: மதுபோதையில் தாய்க்கு பாலியல் தொல்லை; அண்ணனை இரும்பு ராடால் 18 முறை அடித்தே கொன்ற தம்பி.!
Crime (Photo Credit: Pixabay)

நவம்பர் 16, பண்டாரா (Social Viral): மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டாரா மாவட்டம், லஹானி பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் ஆர். போயர் (வயது 31). இவரின் சகோதரர் ராகுல் ஆர். போயர் (வயது 35). ராகுலின் நண்பர்கள் புபேந்திர ஞாயமுர்த்தி (வயது 27), கார்த்திக் மாந்தரே (வயது 24).

ஆகாஷ் போயர் மதுபோதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் எப்போதும் தனக்கு கிடைக்கும் பணத்தை வைத்து மதுபானம் அருந்துவதையும், வீட்டிற்கு வந்து குடும்பத்தோடு தகராறு செய்வதையும் வாடிக்கையாக்கி இருக்கிறார்.

அவரிடம் மதுபோதை பழக்கத்தை கைவிடுமாறு குடும்பத்தினர் பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை. காலையில் எழுந்ததும் நல்லவர் போல நான் சரியாக இருப்பேன் என புறப்பட்டு வெளியே செல்பவர், மீண்டும் மாலை அல்லது இரவில் முழு போதையுடன் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். Tamilnadu 10, 11, 12th Public Examination: 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பட்டியல் வெளியீடு: முழு விபரம் இதோ.! 

கடந்த சில மாதங்களாகவே மதுபோதையில் வீட்டிற்கு வரும் ஆகாஷ், தனது தாயாரை பலவந்தப்படுத்தி தாக்கி பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் இதுகுறித்து தாய் யாரிடமும் கூறவில்லை. பின் மகனின் செயல்கள் தொடர்ந்ததால், இளையமகனிடம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது சகோதரரை கண்டித்தும் பலனில்லை. இந்நிலையில், கடந்த 14ம் தேதி தீபாவளி கொண்டாட்டத்தின்போது அண்ணன் ஆகாஷின் அராஜகம் தொடரவே ராகுல், புபேந்திரன், கார்த்திக் ஆகியோர் ஒன்று சேர்ந்து ஆகாஷை இரும்பு ராடால் கடுமையாக தாக்கி இருக்கின்றனர்.

தலையில் 18க்கும் மேற்பட்ட முறைகள் இரும்பு ராடால் தாக்கியதில், ஆகாஷின் உயிர் பறிபோனது. பின் உடலை சாலையில் கொண்டு வீசிவிட்டு எதுவும் தெரியதுபோல வந்துள்ளனர். காவல் துறையினர் சாலையில் சடலம் கிடப்பதாக தகவல் அறிந்து சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் விசாரணை மேற்கொண்டதில், கொலையானவர் அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பது உறுதியாகவே, அவரின் குடும்பத்தாரிடம் விசாரித்தபோது முதலில் கொலை என தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து நடந்த விசாரணையிலேயே ஆகாஷ், அவரின் சகோதரர் ராகுல் மற்றும் ராகுலின் நண்பர்களால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இவர்களை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

(The above story first appeared on LatestLY on Nov 16, 2023 01:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).