Minister Anbil Mahesh Exam Announcement (Photo Credit: X / Pixabay)

நவம்பர் 16, சென்னை (Chennai): தமிழ்நாடு மாநிலக்கல்வி வாரியத்தில் (Tamilnadu School Educational Department) பயின்று வரும் 10ம் வகுப்பு, 11 & 12ம் வகுப்பு மாணவர்களின் நடப்பு கல்வியாண்டு 2023 - 2024, இன்னும் 4 மாதங்களில் நிறைவுபெறவுள்ளது. இதனால் மாணவர்கள் தற்போதில் இருந்தே பொதுத்தேர்வை நோக்கி கவனம் செலுத்தவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலும் ஏப்ரல் - மே மாதத்தில் நடைபெறவுள்ளதால், மாணவர்களுக்கான தேர்வுகளை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தலின்போது பள்ளி, கல்லூரிகள் வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்படும் என்பதால், தேர்தலில் தொடங்கி, முடிவு வரை தேர்தல் ஆணையத்தின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும்.

இன்று (நவ.16, 2023) தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என நேற்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பொதுத்தேர்வுகளுக்கான தேதிகளை அறிவித்தனர். Nellai Junction Brokers Atrocity: கூடுதல் கட்டணம் வசூலித்து, கவுண்டருக்கு வெளியில் முன்பதிவு: நெல்லை சந்திப்பில் தட்கல் பயணிகளிடம் அடாவடி வசூல்.! அதிர்ச்சி விபரம் அம்பலம்.! 

அதன்படி, 10ம் வகுப்புக்கான (10th SSLC Exam Tamilnadu 2024) பொதுத்தேர்வு 26 மார்ச், 2024 முதல் தொடங்கி 08 ஏப்ரல், 2024 வரை நடைபெறுகிறது. செய்முறை தேர்வுகள் 24 பிப்ரவரி, 2024 முதல் 29 பிப்ரவரி, 2024 வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 10, 2024 அன்று வெளியிடப்படும். 11ம் வகுப்புகளுக்கான (11th Public Exam 2024 Tamilnadu) பொதுத்தேர்வு 04 மார்ச், 2024 முதல் தொடங்கி 25 மார்ச், 2024 வரை நடைபெறுகிறது. செய்முறை தேர்வுகள் 19, 2024 பிப்ரவரி முதல் 24 பிப்ரவரி, 2024 வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 14, 2024 அன்று வெளியிடப்படும்.

Minister Anbil Mahesh (Photo Credit: X)

12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு (12th Public Exam Tamilnadu 2024) 01 மார்ச் முதல் தொடங்கி 23 மார்ச் வரை நடைபெற்றுகிறது. செய்முறை தேர்வுகள் 12 பிப்ரவரி முதல் 17 பிப்ரவரி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 06ம் தேதி அன்று வெளியிடப்படும். இந்த தேர்வுகள் காலை 10 மணியளவில் தொடங்கி, மதியம் 01:15 வரை நடைபெறும். காலை 09:00 மணிக்கு மேல் மாணவர்கள் பள்ளிக்கு வருகைதந்து, அவரவர் அறைக்கு செல்ல அறிவுத்தப்படும்.

ஆசிரியர் வருகைதந்ததும், சோதனைக்கு பின்னர் மாணவர்கள் தேர்வு எழுத 10 மணிக்கு அறைக்குள் அனுமதி செய்யப்படுவார்கள். முதல் 15 நிமிடங்களுக்கு மாணவர்களின் விடைத்தாள் நிரப்புதல், மாற்றங்கள் இருந்தால் சோதித்தால் போன்றவைக்கு அனுமதி வழங்கப்பட்டு, 10:15 மணிக்கு தேர்வுகள் அதிகாரபூர்வமாக தொடங்கும். 01:15 மணியளவில் தேர்வுகள் நிறைவுபெறும். Rajapalayam Shocker: ரூ.50 கோடி சொத்துக்காக காளீஸ்வரியின் கபடநாடகம்.. முதலாளியின் கர்ப்பத்தில் தொடங்கி, மாஸ்டருடன் கள்ளக்காதலில் முடிந்த கொலை..! 

பத்தாம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை (SSLC Exam 2024):

26.03.2024 - தமிழ்

28.03.2024 - ஆங்கிலம்

01.04.2024 - கணிதம்

04.04.2024 - அறிவியல்

08.04.2024 - சமூக அறிவியல்

10.05.2024 = தேர்வு முடிவுகள்

பதினோராம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை (HSc Exam First Year 2024):

04.03.2024 - மொழிப்பாடம்

07.03.2024 - ஆங்கிலம்

12.03.2024 - இயற்பியல், பொருளியல்

14.03.2024 - உயிரி வேதியியல்

18.03.2024 - உயிரியல், வரலாறு

21.03.2024 - வேதியியல், புவியியல், கணக்கியல்

25.03.2024 - கணிதம், விலகிங்யல், வணிகவியல்

14.05.2024 = தேர்வு முடிவுகள்

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை (HSc Exam Second Year 2024):

01.03.2024 - மொழிப்பாடம்

05.03.2024 - ஆங்கிலம்

08.03.2024 - கணினி அறிவியல், உயிரியல் ‌

11.03.2024 - வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல்

15.03.2024 - இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்,

19.03.2024 - கணிதம், விலங்கியல், வணிகவியல்,

22.03.2024 - உயிரியல், வரலாறு, தாவரவியல்,

06.05.2024 = தேர்வு முடிவுகள்