Man Feeds Beer to Dog: லைக்குக்காக இப்படியும் படுகேவல செயல்; நாய்க்கு மதுவை ஊற்றிவிட்டு வீடியோ.! போதையில் தள்ளாடிய செல்லப்பிராணி.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் நபர் ஒருவர் ரீலிற்காக நாய்க்கு பீர் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 02, ஆக்ரா (Uttar Pradesh News): இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Reels) மோகம் இன்றைய 2கே கிட்ஸ்களை பாடாய் படுத்துகிறது.. வெறும் லைக் மற்றும் ஷேருக்காக வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள். யூடியூப்பில் வீடியோ போட்டால் காசு சம்பாதிக்கலாம். பேஸ்புக்கில் வீடியோ போட்டால் காசு சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் ரீல்ஸ் போட்டு பாலோயர்களை ஏற்றி சீக்கிரமாக பணக்காரன் ஆக வேண்டும் என்று இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகிறார்கள். அதேநேரம் சிலர் பொழுதுபோக்கிற்காக இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட ஆரம்பித்து இன்று அதை முழுநேர வேலையாக செய்கிறார்கள். சிலரோ லைக்குக்காக உயிரைப் பணயம் வைக்கிறார்கள். Terrifying Video: கட்டிட இடிப்பு பணியில் பகீர்; பாய்ந்து வந்த கல்.. எமனை கண்ணில் பார்த்த சம்பவம்..! தி ரியல் ஃபைனல் டெஸ்டினேசன்.!
அந்த வகையில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவை சேர்ந்த நபர் ஒருவர் நாய்க்கு பீர் கொடுத்து, அது தடுமாறி நடப்பதினை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். லைக்கிற்காக இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச காவல்துறையினர் அந்த நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
குறிப்பு: ஒரு சிறிய அளவு ஆல்கஹால் கூட நாய்களுக்கு விஷமாக மாறும் என்கின்றனர் நிபுணர்கள். குறிப்பாக சிறிய நாய்க்குட்டிகளுக்கு, மது மிகவும் ஆபத்தானது. ஹேண்ட் சானிடைசர் மற்றும் ஆண்டிஃபிரீஸ் உள்ளிட்ட பிற வகைகளும் உட்கொள்வதும் மிக ஆபத்தானது. வாந்தி, நிலை கொள்ளாமல் இருந்தால், வழக்கத்திற்கு மாறாக நடந்த கொள்ளுதல் ஆகியவை அதன் உடல் ஆல்கஹால் விஷத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதன் அறிகுறிகளாகும்.
நாய்க்கு பீர் கொடுக்கும் நபரின் ரீல் வீடியோ:
रील बनाने के लिए बेजुबान कि जिंदगी के साथ खेलता रहा युवक
वायरल वीडियो में कुत्ते के पिल्ले को पिला रहा है बीयर
युवक की इस हरकत का वीडियो सोशल मीडिया पर हुआ वायरल
आगरा थाना सिकंदरा क्षेत्र के शास्त्री पुरम क्षेत्र का मामला@agrapolice @Uppolice #viralvideo pic.twitter.com/EeD78DMtmI
— Aviral Singh (@aviralsingh15) October 1, 2024
(The above story first appeared on LatestLY on Oct 02, 2024 12:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

