CFO Resignation Letter: எளிமையாக சிந்தித்து பணியில் இருந்து விலகிய மூத்த பொருளாதார அதிகாரி: வைரலாகும் விருப்ப ஓய்வு கடிதம்.!

எப்போதும் நாம் செய்யும் எளிமையான செயல்கள் சில நேரம் எதிர்பாராத திருப்பங்களை தரும். அதுபோல, பணியை விரும்பி துறந்த நபரின் ராஜினாமா கடிதம் வைரலாகியுள்ள நிகழ்வு குறித்து விலக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

CFO Resignation Letter: எளிமையாக சிந்தித்து பணியில் இருந்து விலகிய மூத்த பொருளாதார அதிகாரி: வைரலாகும் விருப்ப ஓய்வு கடிதம்.!
Resignation Letter (Photo Credit: https://www.bseindia.com/ )

டிசம்பர் 22, மும்பை (Mumbai): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் மிஸ்தி இந்தியா லிமிடெட் (Misthi India Limited) நிறுவனம். இந்நிறுவனத்தில் ரிங்கு படேல் என்பவர் மூத்த பொருளாதார அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.

பணியில் இருந்து விலகினார்: இந்த நிலையில், சமீபத்தில் இவர் தனது வேலையில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகிக் கொண்டதாக தெரியவருகிறது. இதனையடுத்து, தனது கைப்பட அவர் தனது நிறுவனத்தின் முதன்மை இயக்குனருக்கு, ராஜினாமா கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். தற்போது, அந்த கடிதம் (Resignation Letter) வெளியாகி வைரலாகி வருகிறது.

நோட்டு கொண்டு கடிதம்: கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை எழுதி அனுப்பி வைத்துள்ளார். அவர் வீட்டில் இருந்தபடி ராஜினாமா கடிதத்தை அனுப்பிய நிலையில், அவசரத்திற்கு தனது மகனின் நோட்டை பயன்படுத்தி, அதில் எளிமையான முறையில் தனது ராஜினாமா குறித்த விஷயத்தை தெரிவித்து, போட்டோ எடுத்து அனுப்பி வைத்தார். 91 Delivery in 2 Days: வெள்ளத்தின் பிடியில் சிக்காமல் இருக்க கர்ப்பிணிகளை அறிவுறுத்திய மாவட்ட நிர்வாகம்: 2 நாட்களில் 91 பிரசவம்.! 

வைரலான பணிவிருப்ப ஓய்வு கடிதம்: இந்த பதிவுகள் தற்போது வைரல் ஆகியுள்ளது. ஏனெனில் ரிங்கு தனது மகனின் கோடுபோட்ட நோட்டை பயன்படுத்தி எழுதி இருந்தார். பொதுவாக வேலைகளை ராஜினாமா செய்யும்போது, பலரும் அடிக்கோடு இடாத தாளினை பயன்படுத்தி எழுதி அனுப்புவது அல்லது உயர் அதிகாரியிடம் சமர்ப்பிப்பது வழக்கம்.

ராஜினாமா ஏற்பு: ஆனால், ரிங்குவின் செயல் சற்று வித்தியாசமான வகையில் இருந்ததால் வைரல் ஆகியுள்ளது. எனினும் அவர் செய்ததில் தவறு இல்லை என்றும் ஒருதரப்பு கூறி வருகிறது. அவரின் ராஜினாமா கடிதத்தையும் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(The above story first appeared on LatestLY on Dec 22, 2023 09:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).