Tenkasi Flood | Pregnant File Pic (Photo Credit: thinak_ X / Pixabay)

டிசம்பர் 22, திருநெல்வேலி (Tirunelveli News): கடந்த வாரம் இலங்கையை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் தீவிர மழைப்பொழிவை எதிர்கொண்டது. இதில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் கடும் சேதத்தை எதிர்கொண்டன.

வரலாறு காணாத மழை: 3 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நீடித்த மழை காரணாமாக, திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் 11 அணைகளும் முழு கொள்ளளவை விரைந்து எட்டின. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு பின்னர் பெய்த அதிதீவிர கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல நகரங்களும், கிராமங்களும் தண்ணீரின் பிடியில் சிக்கின.

வெள்ளத்தின் பிடியில் மாவட்டம்: திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் நில அமைப்பு ஆறுகள், கண்மாய்கள் போன்ற நீர்நிலையை ஒட்டியே அமைந்ததால், அங்கு கடும் சேதம் ஏற்பட்டது. மீட்பு பணிகள் மழை நின்ற நாட்களில் இருந்து தொடர்ந்து வருகிறது. வெள்ளம் வடிய தொடங்கினாலும், இன்னும் முழுவதுமாக வடிந்தபாடில்லை. 13-Year-Old Girl Dies Of Heart Attack: 13 வயது பள்ளி மாணவி… மாரடைப்பால் மரணம்..! 

மீட்பு பணிகள் தீவிரம்: இதனால் நேற்று வரையில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் முழு அளவிலான பள்ளி-கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தினை முன்னிட்டு, மக்களை பாதுகாக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு மீட்பு பணிகளில் துரிதமாக ஈடுபட்டது.

Vaigai Flooded (Photo Credit: @SowmiyaeventsI X)

கர்ப்பிணிகளுக்கு அறிவுறுத்தல்: மாவட்ட அளவில் உள்ள கர்ப்பிணி பெண்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, இவர்களில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ள மற்றும் இறுதி மாதங்களில் இருக்கும் 696 கர்ப்பிணிகளுக்கு தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட மருத்துவமனைகளில் அனுமதியாகவும் அறிவுறுத்தப்பட்டது. Vegetable Price Rise: மீண்டும் உயர்ந்த காய்கறி விலை… காரணம் என்ன?.! 

மருத்துவமனையில் பிரசவம்: இவர்களில் 142 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் 91 பிரசவங்கள் அடுத்தடுத்து நடந்தது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 36 கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் 14 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. அரசு பொதுமருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட 23 கர்ப்பிணிகளின் 13 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது.

சாதுர்யமான செயலால் தாய்-சேய் நலம்: தனியார் மருத்துவமனையில் அனுமதியான 56 கர்ப்பிணிகளில் 43 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 37 கர்ப்பிணிகள் அனுமதியான நிலையில், இவர்களில் 21 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது.