Monkey Attack: குரங்கு கடித்தற்காக சிகிச்சை பெற்று வந்த நபர் செய்த அட்ராசிட்டி.. வைரலாகும் வீடியோ..!

சிவகங்கை அரசு மருத்துவமனையில் குரங்கு கடித்தற்காக சிகிச்சை பெற்று வந்த நபர் திடீரென குரங்கு போல் தாக்குவதும் கடிப்பதும் போன்ற செயலில் ஈடுபட்டார்.

Monkey Attack: குரங்கு கடித்தற்காக சிகிச்சை பெற்று வந்த நபர் செய்த அட்ராசிட்டி.. வைரலாகும் வீடியோ..!
Monkey Attack (Photo Credit: @backiya28 X)

ஆகஸ்ட் 19, சிவகங்கை (Sivagangai News): சிவகங்கை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் குரங்கு கடித்தற்காக சிகிச்சை பெற்று வந்த நபர் திடீரென நுழைவாய்க் கம்பியில் ஏறி குரங்கு போல் அமர்ந்து கொண்டு அங்கிருந்தவர்களை தாக்குவதும் கடிப்பதும் போன்ற செயலில் ஈடுபட்டார். பின்னர் காவலாளிகள் அவரை கட்டுப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இதனால் மருத்துவமனை வளாகமே பரபரப்பாக இன்று காணப்பட்டது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 18-Yr-Old Boy Dies After AC Falls On Him: மாடியில் இருந்து தலையில் விழுந்த ஏசி: நொடியில் உயிரிழந்த இளைஞர்.. பதறவைக்கும் காட்சிகள்.!

குரங்கு உங்களை கடித்து விட்டால் வேறு வழியில்லை மருத்துவம் செய்து கொண்டுதான் ஆக வேண்டும். முதலில் கடி பட்ட இடத்தை தண்ணீர் மற்றும் சோப் போட்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். கடிபட்ட இடத்தில் மஞ்சள் பொடி ஆயின்மென்ட் போன்ற எதையும் போடக்கூடாது. ரத்தம் நிறைய வராமல் இருக்கும் பட்சத்தில் கட்டு போடாமல் இருப்பது நலம். இந்த முதலுதவியை செய்து கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைவில் சென்று மருத்துவரை நாடுவது மிகவும் முக்கியம்.

(The above story first appeared on LatestLY on Aug 19, 2024 08:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).