ஆகஸ்ட் 19, புதுடெல்லி (New Delhi): டெல்லியின் கரோல் பாக் பகுதியில் (DBG Road Area) உள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து ஏர் கண்டிஷனர் நேராக தலையில் விழுந்ததில் 18 வயது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 17, சனிக்கிழமை இரவு 7 மணியளவில், ஜிதேஷ் சாதா என்ற அந்த இளைஞர், ஒரு ஸ்கூட்டரில் அமர்ந்து தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இரண்டு இளைஞர்கள் பேசிகொண்டுள்ளனர். அதில் ஒருவர் ஸ்கூட்டரில் அமர்ந்து உள்ளார். Wayanad Landslides: நிலச்சரிவால் உருக்குலைந்த வயநாட்டில் நடந்தது என்ன?.. பதறவைக்கும் புதிய சிசிடிவி காட்சிகள்..!
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து ஒரு ஏர் கண்டிஷனர் யூனிட் திடீரென விழுகிறது (AC Falls On Him). இதில் ஸ்கூட்டரில் இருந்த இளைஞரின் தலை மேலே விழுகிறது. இந்த விபத்தில் இளைஞர்கள் இருவரும் உடனடியாக சரிந்து விழுகின்றனர். உடனடியாக இருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அதில் ஸ்கூட்டரில் அமர்ந்து இருந்தவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். அவரது நண்பர், காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் அவர் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து டெல்லி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
देखिए दिल हिला देने वाला सीसीटीवी सामने आया है
अचानक हुआ एक हादसा,गली मे खड़े दो लड़के बाते कर रहे थे, तभी तीसरी मंजिल से एक AC उपर से एक लडके के उप्पर गिर पड़ा , जिसमे 19 साल के लड़के की मौत हो गई, घटना करोल बाग़ इलाके की है जिसका CCTV सामने आया है @DelhiPolice pic.twitter.com/vXL0ungIkq— Lavely Bakshi (@lavelybakshi) August 18, 2024