Man Bites Wife's Nose: வரதட்சணைக்காக மனைவி மூக்கை கடித்த கணவர்... வலைவீசி தேடும் காவல்துறையினர்..!
வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தியதோடு மட்டுமல்லாமல் அவரது மூக்கை கடித்து துப்பிய கணவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
டிசம்பர் 21, லக்னோ (Uttar Pradesh News): இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர் நஜீம். அதே பகுதியைச் சேர்ந்த அஜ்மி (22) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இதனிடையே, திருமணத்திற்கு முன்பு உறுதி செய்யப்பட்ட வரதட்சணையை (Dowry) காட்டிலும், சிறிதளவு குறைவான தொகையை பெண் வீட்டார் வழங்கியதாக தெரிகிறது.
வரதட்சணை கேட்டு கொடுமை: இதனால் திருமணம் ஆன நாள் முதலாகவே அஜ்மியை, கணவன் நஜீமும், அவரது குடும்பத்தினரும் துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. ஒவ்வொரு முறை இப்படி பிரச்சினை நடக்கும் போதும், காவல் துறையினரிடம் கூறுவதற்காக அஜ்மி புறப்பட்டு செல்வாராம். ஆனால், அந்த ஊர் பெரியவர்கள் அவரை மடக்கிப் பிடித்து பஞ்சாயத்து நடத்தியே பிரச்சினையை தீர்த்து வைத்து வந்துள்ளனர். Bajrang Punia Returns Padmashri Award: பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கும் பஜ்ரங் புனியா.. நடந்தது என்ன?..!
வலைவீசி தேடும் காவல்துறையினர்கள்: இந்த சூழலில், நேற்று முன்தினம் இரவு மது போதையில் வந்த நஜீம், தான் கேட்ட வரதட்சணையை இப்போதே கொண்டு வருமாறு அஜ்மியிடம் கூறி அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர், கூறிய வரதட்சணையை கொடுக்க முடியாத உனக்கு மூக்கு எதற்கு எனக் கேட்டு, பாய்ந்து சென்று அஜ்மியின் மூக்கை கடித்துள்ளார். இதில் மூக்கின் சிறு துண்டை அவர் கடித்து துப்பியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய அஜ்மி, அப்படியே ஓடிச்சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை பதிவு செய்த காவல்துறையினர், கணவன் நஜீம் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Dec 23, 2023 07:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

