டிசம்பர் 22, டெல்லி (Delhi): 2023 ஆம் ஆண்டு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக பாஜக எம்பி பிரிஜ் பூரன் சரண் சிங் இருந்தபோது, அங்கிருந்த பெண் மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்திய மல்யுத்தம் வீரர்கள் அவர் மீது விசாரணை நடத்தக் கூறி போராட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி இந்திய மல்யுத்த கூட்டமைப்பை கலைக்க, கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க, மேற்பார்வை குழு அமைப்பதாக அரசு கூறியது. அந்தக் குழு விசாரணையின் போது ஆஜரான பூஷன், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளை மறுத்தார். அதே நேரம் பூசனை காப்பாற்ற பாஜக முயற்சிப்பதாகவும் கண்டனங்கள் எழுந்தன.
அதனைத் தொடர்ந்து மல்யுத்த வீரர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இறுதியில் விளையாட்டுத்துறை அமைச்சர் பூஷன் மீது தகுந்த விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பானது இடைநீக்கம் செய்யப்பட்டது. அதன் தேர்தல் (Wrestling Federation Elections) ஆனது டிசம்பர் 21ஆம் தேதி நடக்கும் என்றும் அறிவித்தனர். இந்நிலையில் நேற்று நடந்த அந்தத் தேர்தலில் பூசனின் நெருங்கிய நண்பர் சஞ்சய் சிங் போட்டியிட்டார். அதுமட்டுமின்றி நேற்று தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து மல்யுத்த வீரர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். HC On Wife Not Fasting On Karwa Chauth: விரதம் எடுப்பது தனி மனிதரின் உரிமை... டெல்லி நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு..!
பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கும் மல்யுத்த வீரர்: இந்நிலையில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா (Bajrang Punia) தன்னுடைய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என எக்ஸ் தளம் வாயிலாக பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், புதிய தலைவரான சஞ்சய் சிங், தேர்வு செய்யப்பட்டதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மத்திய அரசு எனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கின்றேன் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
मैं अपना पद्मश्री पुरस्कार प्रधानमंत्री जी को वापस लौटा रहा हूँ. कहने के लिए बस मेरा यह पत्र है. यही मेरी स्टेटमेंट है। 🙏🏽 pic.twitter.com/PYfA9KhUg9
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) December 22, 2023