Pudukkottai Accident: சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து 5 வயது சிறுமி, இளைஞர் உயிரிழப்பு; சோகத்தில் குடும்பத்தினர்.!
சந்தைக்கு சென்றுவிட்டு உற்சாகமாக வீட்டிற்கு திரும்பிய மழலையும், அவரை அழைத்துச்சென்ற நபரும் விபத்தில் சிக்கி பலியான சோகம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
பிப்ரவரி 22, ஆலங்குடி (Pudukkottai News): புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செம்பட்டி விடுதி, ஆலங்குடி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது உறவினர் முருகேசன். முருகேசனுக்கு 5 வயதுடைய பிரீத்தா என்ற மகள் இருக்கிறார். மாரிமுத்து தனது உறவினர் முருகேசனின் வீட்டிற்கு அவ்வப்போது வந்து செல்வார். அப்போது, முருகேசனின் மகள் பிரீத்தாவை தனது இருசக்கர வாகனத்தில் ஊரில் உள்ள பகுதியில் அழைத்துச்சென்று, பின் வீட்டிற்கு அழைத்து வந்து விடுவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. Mayiladuthurai Shocker: பெண் பட்டிமன்ற பேச்சாளர் முன் அத்துமீறிய இளைஞர் கைது: இரயில் பயணத்தில் துணிகரம்., அதிகாரிகள் வந்ததும் கதறல்..!
மர்மமான முறையில் விபத்து & உயிரிழப்பு: இந்நிலையில், நேற்று மாரிமுத்து - பிரீத்தா ஆகியோர் வாரச்சந்தைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். பின் இருவரும் மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அச்சமயம் சாலையோர பள்ளத்தில் இவர்கள் இருவரும் பயணித்த வாகனம் விபத்திற்குள்ளாகி விழுந்து கிடந்துள்ளது. அவ்வழியே சென்ற மக்கள் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்து, பின் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். Women Loss Job after Eating Sandwich: மீதமிருந்த உணவை சாப்பிட்ட துப்புரவு பணியாளர் பணிநீக்கம்; நிறுவனத்தின் கறார் செயலால் போர்க்கொடி.!
காவல்துறையினர் விசாரணை: தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரின் மரணத்தையும் உறுதி செய்தனர். பின் இவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பின்னால் வந்த வாகனம் ஏதும் மோதி இருவரும் சாலையோர பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தனரா? என அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Feb 22, 2024 10:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

