Sexual Harassment (Photo Credit: @Sriramrpckanna1 X)

பிப்ரவரி 22, மயிலாடுதுறை (Mayiladuthurai News): தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பள்ளிகளில் பயிலும் மாணவிகளில் தொடங்கி பல்வேறு விழிப்புணர்வுகள் வாயிலாக அநீதிகள் நடைபெறும்போது, அதற்கு எதிராக தகுந்த புகார் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இரயில் பயணத்தின்போது அதிர்ச்சி சம்பவம்: இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பெண் பட்டிமன்ற பேச்சாளர் ஒருவர், சம்பவத்தன்று இரயிலில் பட்டிமன்ற நிகழ்ச்சிக்காக பயணம் செய்துகொண்டு இருந்தார். அச்சமயம் பெண்ணின் எதிரில் ஆண் ஒருவர் பயணம் செய்து இருக்கிறார். இரயில் பெட்டியில் கூட்டம் இல்லை என்பதால், பெண்மணி நால்வர் இருக்கையில் தனியே அமர்ந்து இருக்கிறார். அவரின் எதிர்புறம் இளைஞர் ஒருவர் இருந்தார். Paracetamol Overdose and Risk: காய்ச்சலா? தலைவலியா? பாராசிட்டமால் மாத்திரை எடுப்பவரா நீங்கள்?.. பேராபத்து.. ஆய்வில் பதறவைக்கும் உண்மை.. விபரம் உள்ளே.! 

அதிகாரிகளை கண்டதும் பதறல்: பெண் தனியாக இருந்ததை தனக்கு சாதகமாக்க நினைத்தவர், பெண்ணின் முன்பு எழுந்து நின்று ஆடையை அவிழ்த்து அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி இரயில் பாதுகாவலரிடம் சென்று புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் வந்ததும் முதலில் இளைஞர் தப்பி செல்ல முயன்று தான் ஒன்றும் செய்யவில்லை என்று மழுப்பினார்.

காவல்துறையினர் விசாரணை: பெண்மணி தனது புகாரில் உறுதிபட இருக்க, அதிகாரிகள் வந்ததும் விபரத்தை கூறியதைத்தொடர்ந்து தெரியாமல் நடந்துவிட்டது, என்னை மன்னித்துவிடுங்கள் என கதறியுள்ளார். இரயில் பயணத்தில் நடந்த சம்பவத்திற்கு, இரயில் நிலையம் வந்ததும் சம்பந்தப்பட்ட நபர் காவல் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக பெண்ணின் புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட தகவலின்படி இளைஞர் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.