Rajasthan Road Accident: இரயில் தண்டவாளத்தில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து; 4 பேர் பரிதாப பலி., 28 பேர் படுகாயம்.!
சாலை பயணங்களில் அதிக கவனத்துடன் சென்றாலும், சில நேரங்களில் அலட்சியம் மற்றும் பிற கோளாறுகள் காரணமாக விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது.
நவம்பர் 06 , தவுஷா (Social Viral): ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தவுஷா மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது.
அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மேம்பாலத்தில் இருந்து இரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 40 பயணிகளில், 4 பேர் பரிதாபமாக பலியாகினர். Father Killed Children: நண்பனுக்கு சாட்சி கையெழுத்து போட்டு கடனாளியான குடும்பத்தலைவர்; 2 குழந்தைகளை கொன்று, தானும் தற்கொலை.!
மேலும், 28 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் தற்போது அங்குள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியானோர் யார்? எங்கிருந்து எங்கு சென்றவர்கள்? என தகவல் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
#WATCH Rajasthan: Four people died, and several injured after a bus lost its control and fell on the railway track near Dausa Collectorate Circle. All the injured have been taken to the hospital. (05/11) pic.twitter.com/Xge5qLT9My
— ANI (@ANI) November 6, 2023
(The above story first appeared on LatestLY on Nov 06, 2023 08:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

