Kistinka River Turned Red: தொழிற்சாலை கழிவு நச்சுக்களால் நிறம் மாறிப்போன நதி; இயற்கைக்கு மாறாக நடந்த நிகழ்வு.!
சர்வதேச அளவில் உள்ள பல நாடுகளிலும், தொழிற்சாலையின் கழிவுகளை சரிவர சுத்திகரிக்காமல் ஆற்றில் கலக்க விடப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது.
டிசம்பர் 26, சைபீரியா (Russia): ரஷ்யாவில் உள்ள சைபீரியாவில், ரஷ்யாவின் முக்கிய நதிகளில் ஒன்றான இஸ்கிடிம்கா நதி பாய்கிறது. இந்நதி தற்போது பீட்ரூட் சிவப்பு நிறத்தில் மாறி உள்ளூர் மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
சிவந்த நிறத்தில் நதிகள்: ரஷியாவில் உள்ள பல்வேறு நதிகள் மாசுபாடு காரணமாக அவ்வப்போது சிவந்த நிறத்தில் மாறுவது தொடர்கதையாகியுள்ளது. தற்போது தொழில் நகரத்தை ஒட்டி அமைந்துள்ள இஸ்கிடிம்கா நதியும் நிறம் மாறியுள்ளது. Marriage Stopped for Meat: ரொம்ப கோபக்கார மாப்பிள்ளையா இருப்பார் போல., மட்டனுக்காக திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்..!
ஆய்வு செய்யும் அதிகாரிகள்: இதற்கான காரணம் தொடர்பாக சைபீரிய கொமராவோ பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உள்ளூர் மக்களின் தகவல்படி, அங்குள்ள நிறம் மாற்றமடைந்து நதிகளில் வாத்துகள் இறங்கவும் மறுக்கின்றன என கூறுகிறார்கள்.
வைரலாகும் வீடியோ: கடந்த 2020ம் ஆண்டும் இதேபோல நதியின் நிறம் மாற்றமடைந்து, பின் இயற்கையாக சரியானது. கடந்த நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Dec 26, 2023 02:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

