Marriage (Photo Credit: Pixabay)

டிசம்பர் 26, நிஜாமாபாத் (Nizamabad): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் மாவட்டம், ஜெயதியல் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த இலங்கைக்கும் இடையே திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக இருதரப்பு பெற்றோர் மற்றும் உறவினர்களும் திருமண நாளை எதிர்நோக்கி காத்திருந்துள்ளனர்.

திருமணத்தை நோக்கி காத்திருந்த தம்பதி: இம்மாதத்தின் தொடக்கத்திலேயே இருவருக்கும் விரைவில் திருமணம் செய்ய பேசி முடிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு மணமகள் வீட்டாரின் சார்பில், மணமகன் வீட்டாருக்கு தடபுடல் விருந்து ஏற்பாடுகளும் நிச்சயதார்த்த நிகழ்வுகளில் செய்யப்பட்டுள்ளன. அச்சமயம் வந்திருந்த உறவினர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டுள்ளது. Nike Layoff: தொடர் விற்பனை சரிவு எதிரொலி; 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது நைக் நிறுவனம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்.! 

மணமகன் கேட்ட கேள்வியால் வெடித்த சர்ச்சை: இந்த பட்டியலில் ஆட்டு இறைச்சி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணமகன் தரப்பு, மணப்பெண் தரப்பிடம் அதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளது. மணப்பெண் தரப்பு அளித்த பதிலை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த மணமகன் வீட்டார், தொடர்ந்து மணப்பெண் வீட்டாரிடம் பிரச்சனை செய்துள்ளனர்.

நின்றுபோன திருமணம்: ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போனதைத்தொடர்ந்து, இருதரப்பையும் சண்டையிட்டுள்ளது. இறுதியில் உறவினர்கள் தலையிட்டு சண்டையை நிறுத்திய நிலையில், மணமகன் தரப்பு திருமணத்தை மட்டனுக்காக நிறுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் எவ்வித புகாரும் வரவில்லை என்றாலும், அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மணப்பெண் தரப்பு எங்களை அவமதித்த காரணத்தால் திருமணத்தை நிறுத்தினோம் என்று கூறியுள்ளனர்.