Shocking Video: ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: அப்பா வயது நபர் செய்த கீழ்த்தரமான செயல்.. ஷாக் வீடியோ வைரல்.!

அப்பா வயதுடைய நபர் ஒருவர், ரயில் பயணத்தின்போது உறங்கிக்கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவரை கவனித்த இளைஞர் கண்டித்து, இந்த செயலை வீடியோவும் எடுத்துள்ளார். அந்த நபரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகித்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Shocking Video: ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: அப்பா வயது நபர் செய்த கீழ்த்தரமான செயல்.. ஷாக் வீடியோ வைரல்.!
a Man Sexually Harassed Child Girl in Running Train (Photo Credit: @Prajapat204 X)

அக்டோபர் 20, புதுடெல்லி (New Delhi News): இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான விஷயங்கள் பாலியல் பலாத்காரம், வரதட்சணை கொடுமை என பல வகைகளில் நடைபெறுகிறது. இதில் பாலியல் குற்றசாட்டுகள் மற்றும் அதுசார்ந்த பிரச்சனைகள் தினமும் அரங்கேறி வருகிறது. காதலருடன் தனிமையில் சென்ற பெண் பலாத்காரம், சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை, பேருந்து மற்றும் ரயில் பயணத்தில் பலாத்காரம் & கொலை, கொலை முயற்சி என குற்றங்கள் தொடருகின்றன. தற்போதைய சட்டம் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு நீதிபெற்றுத் தரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு இருந்தாலும், அதுகுறித்த விழிப்புணர்வு கூடுதலாக செய்யப்பட வேண்டும். தீபாவளி 2025: பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வழிமுறைகள்.. தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?.. அவசர எண்கள் அறிவிப்பு.! 

சிறுமிக்கு பாலியல் தொல்லை:

இந்நிலையில், ரயில் பயணத்தின்போது, நடுத்தர வயது நபர் ஒருவர் குடும்பத்தினருடன் பயணம் செய்த சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பின் எதுவும் தெரியாதது போல எழுந்து சென்றுள்ளார். சிறுமிக்கும் விபரம் தெரியாத காரணத்தால் அவர் கண்டுகொள்ளவில்லை. இந்த விஷயத்தை ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் பார்த்து வீடியோ எடுத்த நிலையில், அந்த ஆசாமியின் செயலையும் கண்டித்து கேள்வி எழுப்பினார். இதுதொடர்பான வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நபர், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்:

(The above story first appeared on LatestLY on Oct 20, 2025 08:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).