Wedding Poster Like Dil Raju Dialogue: இது அதுல... தில் ராஜுவின் டயலாக்கை வைத்து நண்பனுக்கு திருமண போஸ்டர்.. மொத்தத்துல ஆப்பு டோய்..!
வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசிய தில் ராஜுவின் டயலாக்கை தங்களுக்கு ஏற்றபடி மாற்றிய இளைஞர்கள், அதனை நண்பனின் திருமணத்திற்கு போஸ்டராக அடித்தது மெகா வைரலாகி இருக்கிறது.
ஜனவரி 28: வாரிசு (Varisu) திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு (Dil Raju)"டான்ஸ் வேண்டுமா டான்ஸ் இருக்கு, பைட் வேணுமா பைட் இருக்கு".. என பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு நெட்டிசன்களிடையே (Netizens Troll Material) கவனிக்கப்பட்டு, இன்று வரை வச்சி செய்யப்படுகிறது.
இதற்கிடையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் (Karaikudi, Sivaganga) நடைபெற்ற திருமண விழாவில் (Wedding) தில் ராஜுவின் புகைப்படத்தோடு எழுதப்பட்டுள்ள வசனங்கள் வைரலாகி வருகின்றன. திருமணமாகும் இளைஞருக்கு அவரின் நண்பர்கள் சார்பில் வைக்கப்பட்ட பேனர் தற்போது ட்ரெண்டிங்காகி உள்ளது. DMK TR Balu Intimation Speech: கி.வீரமணி மீது கைவைப்பவன் கையை வெட்டுவேன் – திமுக எம்.பி டி.ஆர் பாலு பரபரப்பு பேச்சு.!
அந்த போஸ்டரின்படி, கடந்த 26ம் தேதி ஆனந்த் என்ற இளைஞருக்கும் - அருள் பிரியா (Anand Weds Arul Priya) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது உறுதியாகியுள்ளது. போஸ்டரில் நண்பர்கள் எழுதியுள்ள வசனமாவது, "After Marriage.. இனிமே பொண்டாட்டிகிட்ட..
அடி வேணுமா? அடி இருக்கு..
தலையில கொட்டு வேணுமா? கொட்டு இருக்கு..
வயித்துல குத்து வேணுமா? குத்து இருக்கு.
மிதி வேணுமா? அதுவும் இருக்கு..
மொத்தத்துல உனக்கு ஆப்பு இருக்குஊ..
ஹாப்பி மேரேஜ் லைப் நண்பா" என பதிவிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரும், டயலாக்கும் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 28, 2023 09:41 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(The above story first appeared on LatestLY on Jan 28, 2023 11:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

