T.R. Balu - K.Veeramani (Photo Credit Wikipedia / KVeeramani.com )

ஜனவரி 28: மதுரையில் (Madurai) நடைபெற்ற திராவிட கழகத்தின் (Dravidar Kazhagam) திறந்தவெளி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு (DMK T.R. Balu MP) பேசுகையில், "தமிழ்நாடு போல கொலம்பியா (Colombia) பெரிய நாடு. பனாமா கால்வாய் (Panama Canal) தோண்டப்படவில்லை என்றால் 12 ஆயிரம் கிலோமீட்டர் தொலைதூரம் பயணம் செய்யவேண்டியிருக்கும். அங்கு பனாமா கால்வாய் கட்டப்படும் போது ஒன்றரை இலட்சம் பேரை பலிகொடுத்து 10 ஆண்டுகளில் கட்டி முடித்தனர். அங்கு உலகத்தில் 70% வியாபாரம் அங்கு சென்றுவிட்டது.

இந்தியாவிற்கு வரும் 70% கப்பல்கள் சேதுசமுத்திரம் (Sethusamudram Shipping Canal Project) நிறைவேற்றப்பட்டால் இவ்வழியே செல்லும். ஆண்டுக்கு 270 கோடி சாதரணமாக வருமானம் கிடைக்கும். மொத்தமாக 700 கோடி வருமானம் வரும் திட்டத்தை அன்று முடக்கிப்போட்டார்கள். உங்களின் சார்பிலேயே நான் கேட்கிறேன். நல்லா இருப்பீர்களா பாவிகளா?. நான் அய்யாவை (கி.வீரமணி K.Veeramani) வைத்துக்கொண்டு பாவி குறித்து பேசமாட்டேன். அவருக்கு அதன் மீது நம்பிக்கை இல்லை. நான் சாபத்தை நம்புகிறேன். Maduranthakam Van Accident: திடீரென வெடித்த டயர்.. தறிகெட்டு தலைகுப்புற கவிழ்ந்த வேன்.. சிறுமி, 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பரிதாப பலி.!

அவர்கள் சாபம் விட்டால் பலிக்கும். நான் சாபம் விட்டால் பலிக்காதா?. நான் கொஞ்சம் முரடன் போல என்று கூறுவார்கள். உண்மைதான். நான் தவறு நடந்தால் முரடன்போலத்தான் செயல்படுவேன். அதனை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது. உங்களை (கி.வீரமணியை குறிப்பிடுகிறார்) எவனாவது சீண்டினால் அமைதியாக இருக்க முடியுமா?. திருப்பி அடிக்க முடியுமா?. அதற்கு பலம் இல்லை. ஆனால், என்னால் அடிக்க முடியும்..

நான் திருப்பி அடிப்பேன். என்னிடம் பலம் உள்ளது. எனது கட்சி தலைவரை தீண்டினால், எவனாவது அய்யா (கி.வீரமணி) மீது கைவைக்க வந்தால் அவனின் கைகளை (TR Balu Intimation Speech) வெட்டுவேன். இது எனது தர்மம். கைகளை வெட்டுவது நியாயம். அது நியாயம் இல்லை என்பதை நீதிமன்றத்தில் சென்று சொல்லுங்கள். ஆனால், அதற்குள் நான் கைகளை வெட்டிவிடுவேன். நாளை காலை முதல் வேலையாக என்னை நடவடக்கத்துடன் பேசச்சொல்லி சொல்லுவார்கள். ஆனால், இப்போது சொல்ல முடியாதல்லவா" என பேசினார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 27, 2023 08:39 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).