செப்டம்பர் 19, சோனிபெட் (Social Viral): ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபெட், பீகான் சுங்கச்சாவடியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி வாகனங்கள் தங்களின் வரிசையில் ஒவ்வொன்றாக பயணித்து சுங்கச்சாவடியை கடந்து சென்றது.
அப்போது, மதுபோதையில் காரில் வந்த தம்பதிகள், தங்களின் வாகனத்தில் பொறுமையாக பிற வாகன ஓட்டிகளைளைப்போல பயணிக்காது, எதிர்திசையில் உள்ள வழிக்கு சென்று இருக்கின்றனர்.
அங்கிருந்து சாலையில் சுங்கச்சாவடியை கடந்து பயணிக்க முற்பட்டுள்ளனர். இதனை கவனித்த சுங்கச்சாவடி ஊழியர்கள் காரை நிறுத்தி கண்டித்து இருக்கின்றனர். India Rejects Canada PM Allegation: காலிஸ்தானிய பயங்கரவாதி கொலையில் மத்திய அரசுக்கு தொடர்பா?: கனடா பிரதமரின் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம்.!
இதனால் ஆத்திரமடைந்த தம்பதிகள், காரில் இருந்து இறங்கி சுங்கச்சாவடி ஊழியர்களை அவதூறாக பேசியுள்ளனர். இதனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் உச்சபட்சமாக சுங்கச்சாவடி ஊழியர்கள் 7 பேர் தம்பதிகளை தாக்கி இருக்கின்றனர்.
தம்பதிகளும் மறுமுனையில் தங்களின் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி சுங்கச்சாவடி ஊழியர்கள் 7 பேரை கைது செய்தனர்.
இவர்கள் கும்பலாக சேர்ந்து சண்டையிட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
सोनीपत के भिगान प्लाजा पर टोलकर्मियों ने पति-पत्नी को बेरहमी से पीटा. कार सवारों पर शराब के नशे में रॉंग साइड आने का आरोप. घटना के बाद पुलिस की मौजूदगी में दोनों पक्षों में हुआ था समझौता.
9 सितंबर की घटना का वीडियो वायरल होने के बाद अब पुलिस ने 7 टोलकर्मियों को हिरासत में लिया. pic.twitter.com/KbUaixAVKF
— Utkarsh Singh (@UtkarshSingh_) September 18, 2023