அக்டோபர் 20, ஹைதராபாத் (Social Viral): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், சிலகாலகுடா காவல் நிலைய அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அம்மாநிலத்தில் நவம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் 2023 நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையினர் மற்றும் பறக்கும் படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். Dog Jump from 5th Floor:5 வது மாடியில் இருந்து குதித்து, அசால்ட்டாக எழுந்து நடக்கும் நாய்; வியப்பூட்டும் வீடியோ வைரல்.!
இந்நிலையில், சிலகாலகுடா காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், அவ்வழியே வந்த காரை காவலர் மகேஷ் என்பவர் நிறுத்த முயற்சித்தார்.
முதலில் சென்ற இருசக்கர வாகன ஓட்டி விரைந்து சென்ற நிலையில், அதற்கு பின் வந்த கார் காவலரின் மீது காரை ஏற்றிச் சென்றது. காயமடைந்த காவலரை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
కానిస్టేబుల్ను గుద్ది తొక్కుకుంటూ దూసుకెళ్లిన కారు
హైదరాబాద్ - రోడ్డుపై వాహన తనిఖీలు చేస్తున్న కానిస్టేబుల్ మీద నుంచి కారు దూసుకెళ్లిన ఘటన చిలకలగూడ పోలీస్ స్టేషన్ పరిధిలో జరిగింది. ఎన్నికల కోడ్ నేపథ్యంలో ఈ నెల 18న రాత్రి వాహన తనిఖీ చేస్తున్న కానిస్టేబుల్ మహేష్.. అటుగా వస్తున్న… pic.twitter.com/LYWTKz9T2n
— Telugu Scribe (@TeluguScribe) October 20, 2023