செப்டம்பர் 27, நாமக்கல் (Namakkal News Today): தமிழக அரசியலில் (Tamilnadu Politics) புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு (2026 Assembly Elections Tamilnadu) இன்னும் 8 மாதங்களே இருக்கின்றன. இதனால் திமுக, அதிமுக, பாஜக, நாதக போன்ற கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை பல்வேறு வியூகங்கள் வாயிலாக செயல்படுத்தி வருகின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை தனித்து களம் காணுவதாக அறிவித்து, அதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளது. திமுக, அதிமுக கட்சிகள் தங்களின் கூட்டணிகளுடன் இணைந்து தேர்தல் பரப்புரை பயணத்தை முன்னெடுக்கின்றன. Gold Rate Today: புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை.. தங்கம் விலையும் கிடுகிடு உயர்வு.. இன்று தங்கம் விலை நிலவரம் இதோ.!
நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம் (Vijay Campaign in Namakkal):
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026ஐ இலக்காக கொண்டு களமிறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) செயல்பாடுகளை தீவிரப்படுத்தி இருக்கிறார். முதற்கட்டமாக வாரத்தின் ஒவ்வொரு நாட்களிலும் மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்து, சனிக்கிழமையில் 2 மாவட்டங்களில் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். விஜயின் பிரச்சாரம் காரணமாக ஒவ்வொரு வாரத்தின் சனிக்கிழமையும் களைகட்டி வருகின்றன. திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொண்ட விஜய், இன்று (செப்டம்பர் 27) நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இன்று காலையே சென்னையில் தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி வந்த விஜய், தொட்டியதில் தனது பிரச்சார வேனில் பயணத்தை தொடங்கினார். நாளைய வானிலை: கொளுத்தும் வெயில்.. தமிழகத்தை குளிர்விக்க கொட்டப்போகும் கனமழை.. அடுத்த 7 நாட்களுக்கு எச்சரிக்கை.!
பிரியமுடன் விஜய்:
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் திருச்சி தொட்டியதில் இருந்து சாலை மார்க்கமாக பிரச்சார பேருந்தில் நாமக்கல் நோக்கி பயணம் செய்தார். அப்போது, ரசிகர் ஒருவர் விஜயும், அஜித்தும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை பிரேம் போட்டு விஜயிடம் கொடுக்க, அதனை அன்புடன் வாங்கியவர் 'பிரியமுடன் விஜய்' என்ற எழுத்துடன் தனது கையெழுத்தை போட்டுக்கொடுத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பிரியமுடன் விஜய் என தவெக தலைவர் கையெழுத்திட்ட காட்சி:
பிரியமுடன் விஜய் @TVKVijayHQ.!! ❤️❤️ pic.twitter.com/IVwEqlxQBz
— JEGADESH TVK (@JegadeshTVK) September 27, 2025