Gold Rate Today: புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை.. தங்கம் விலையும் கிடுகிடு உயர்வு.. இன்று தங்கம் விலை நிலவரம் இதோ.!

சென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) ரூ.85,000ஐ கடந்து விற்பனை செய்யப்படும் நிலையில், வெள்ளி விலை இன்று (Silver Price Today) கிலோவுக்கு புதிய உச்சமாக ரூ.1,59,000 என்ற மதிப்பை எட்டி இருக்கிறது. தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் தங்கம், வெள்ளி விலை (Gold Silver Price Today) நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

Gold Rate Today: புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை.. தங்கம் விலையும் கிடுகிடு உயர்வு.. இன்று தங்கம் விலை நிலவரம் இதோ.!
Gold Silver Price (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 27, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடிக்கும் போர், பங்குச்சந்தையில் தங்கம், வெள்ளி மீதான முதலீடுகள், தங்கம்-வெள்ளியின் தினசரி உற்பத்தி மற்றும் விற்பனை எதிர்பார்ப்பு நிலவரம் உட்பட பல்வேறு காரணிகள் கொண்டு ஒவ்வொரு நாளும் தங்கம்-வெள்ளியின் விலை (Gold Silver Rate Today) நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தங்கம், வெள்ளி விலை என்பது கணிசமான தொகை குறைந்து இருந்தது. ஆனால், தங்கமும், வெள்ளியும் 2025ல் போட்டிபோட்டு உயர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக தங்கம் விலை சென்னையில் சவரனுக்கு ரூ.30,000 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.85 ஆயிரத்தை கடந்துள்ளது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.25,000 என்ற மதிப்பில் இருந்து தற்போது ரூ.1,58,000 என்ற விலை உச்சத்தை சந்தித்துள்ளது. Navratri 2025: நவராத்திரி நாட்களில் மறந்தும் செய்யக்கூடாத விஷயங்கள்.. நோட் பண்ணிக்கோங்க.! 

தங்கம்-வெள்ளி விலை உயர காரணம் என்ன? (Gold Silver Rate Hike Reason):

உலகளாவிய பங்குசந்தையில் தங்கம், வெள்ளி மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில், நாடுகள் அளவில் சீனா அளவுக்கு அதிகமாக தங்கத்தை வாங்கி குவிகிறது. இதனால் தங்கத்தின் மீதான எதிர்பார்ப்பு அதன் தினசரி உற்பத்தியை தாண்டி இருப்பதால், தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், வெள்ளி பொருட்களை மின்சார பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்துகின்றன. சமீபகாலமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர், எலக்ட்ரிக் கார் என மின்சாதன பொருட்களின் உற்பத்தி புதிய அத்தியாயத்தில் பயணம் செய்து வருகிறது. இதனால் வெள்ளியின் தேவையில் தினமும் கிடைக்கும் அளவில் பாதிக்கும் மேல் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. கொள்முதல் அதிகமானதால் வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. Gemini Hug My Younger Self Prompts: சிறுவயது நினைவை கட்டியணைக்கும் ஜெமினி டிரெண்ட்.. உங்களுக்கான டிரெண்டிங் பிராம்ட்ஸ்.! 

தங்கம் விலை (Today Gold Rate in Chennai) & இன்று வெள்ளி விலை (Silver Price in Chennai):

இந்நிலையில், இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.10,640 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.85,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி (Silver) விலையை பொறுத்தவரையில், ரூ.6,000 உயர்ந்து ரூ.1,59,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையும், வெள்ளி விலையும் ஒருசேர உயர்ந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் வெள்ளி விலை சுமார் 300 மடங்கு உயர்ந்திருப்பதாகவும் நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தியா போன்ற நாடுகளில் பாரம்பரியம், கலாச்சார அடையாளமாக தங்கம், வெள்ளி பொருட்கள் பார்க்கப்படுகின்றன. அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை பிரியர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

(The above story first appeared on LatestLY on Sep 27, 2025 09:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).