Taping Fish To ATMs: ஏடிஎம்களில் மீன்களை செல்லோ டேப் போட்டு ஒட்டும் நபர்கள்.. சிறார்களின் அட்டகாசம்..!
இன்ஸ்டாகிராமில் ஏடிஎம்களில் மீன்களை செலோடேப் போட்டு ஒட்டும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
ஜனவரி 25, ப்ரோவோ (Provo): உட்டா (Utah) நாட்டின் ப்ராவோ நகரில், சிறார் ஒருவர் ஏடிஎம்களில் மீன்களை செலோடேப் போட்டு தொடர்ந்து ஒட்டி வந்துள்ளார். மேலும் தனக்கென்ன இன்ஸ்டாகிராமில் fish_bandit84 என்ற பெயரில் அக்கவுண்டை உருவாக்கி அதில் தொடர்ந்து அந்த வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். 17 வயதுடைய அந்த நபர் இவ்வாறு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் செய்துள்ளார். தொடர்ந்து டிசம்பர் மாதம் காவலர் காரில் இறந்த மீன் செலோடேப் போட்டு ஒட்டி கண்டறியப்பட்டது. இதனையும் அந்த நபர் தான் செய்திருப்பார் என்று காவலர்கள் சந்தேகித்தனர். Data Leak: லிங்க்ட்-இன், எக்ஸ், ஸ்னாப்சாட் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. 26 பில்லியனுக்கும் மேற்பட்டோரின் தரவுகள் கசிவு..!
அதனைத் தொடர்ந்து அவர் மீது இரண்டு வழக்குகள் போடப்பட்டது. ஏடிஎம்களில் இருந்து மீன் சடலங்களை சுத்தம் செய்வதற்கு பணம் செலவாகிறது என்றும் காவல்துறையினர் வாகனத்தில் இறந்த மீனை செல்லோ டேப் போட்டு ஒட்டியதற்காகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் அந்த நபருக்கு மீன்கள் எங்கிருந்து கிடைக்கின்றது என்று தெரியவில்லை. அதே நேரம் இந்த வீடியோவிற்காக எந்த ஒரு மீன்களும் புண்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நீதிபதிகள், அந்த நபர் மேல் குற்றம் இல்லை என்றுக்கூறி, இந்த வழக்கினை அதிகாரப்பூர்வமாக மூடிவிட்டனர்.
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Jan 25, 2024 04:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

