Love Couple Suicide: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சோகம்: இளம் காதல் ஜோடி தற்கொலை செய்து உயிரைவிட்ட பரிதாபம்.!

22 வயது இளைஞனும் - 19 வயது இளம்பெண்ணும் காதல் வயப்பட்ட நிலையில், விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கு தெரியவந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இறுதியில் தங்களின் உயிரைமாய்த்து காதல் ஜோடி தங்களின் காதல் ஆழத்தினை நிலைநாட்டி இருக்கிறது.

Love Couple Suicide: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சோகம்: இளம் காதல் ஜோடி தற்கொலை செய்து உயிரைவிட்ட பரிதாபம்.!
Love Couple Sad | Death File pic (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 30, பாராபங்கி (Social Viral): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாராபங்கி (Barabanki, Uttar Pradesh) மாவட்டம், திகைத் நகர் (Tikaitnagar) பகுதியில் 22 வயது இளைஞர் வசித்து வருகிறார். அதேபோல, பாதோசரை (Badosarai) பகுதியில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் காதலாக மாறியதாக தெரிய வருகிறது. இதனையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

இந்த காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்த நிலையில், அவர்கள் தங்களது குழந்தைகளின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். மேலும், இளம் பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறொரு இடத்தில் உடனடியாக திருமணம் செய்ய வரன் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

திருமண தேதியும் உறுதி செய்யப்பட்ட நிலையில், காதல் ஜோடிகள் பிரிய இயலாது இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளனர். இதனிடையே, இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து இருக்கின்றனர். Husband Murder Attempt by Wife: இழப்பீடு தொகைக்கு ஆசைப்பட்டு கணவரை கொலை செய்ய முயற்சி: ரகசிய கேமிராவால் அம்பலமான சதித்திட்டம்.. இராணுவ வீரருக்கே இந்த நிலைமையா?.! 

தங்களின் வீடுகளில் இருவரும் திட்டமிட்டபடி விஷம் குடித்து உயிரை மாய்த்து உள்ளனர். இருதரப்பு பெற்றோரும் தனித்தனியே வெவ்வேறு பகுதிகளில் இருந்தாலும், நிலவரத்தை உணர்ந்துகொண்டு தங்களின் குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் இருவரின் உயிரிழப்பையும் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து, தங்களது வீட்டிற்கு குழந்தைகளின் சடலத்தை எடுத்து வந்த பெற்றோர், இறுதிச்சடங்கு செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் இருந்த காவல்துறையினர், காதல் ஜோடியின் வீட்டிற்கு விரைந்து சென்று இருவரின் சலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துகையில், இருவரின் காதல் விவகாரம் மற்றும் பெற்றோர்களின் எதிர்ப்பு காரணமாக காதல் ஜோடி உயிரை மாய்த்தது தெரியவந்தது.

இருவரின் இல்லமும் வெவ்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால், காவல் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Sep 30, 2023 01:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).