Felicano Johnson Caught by Spy Cam (Photo Credit: @mailOnline Twitter)

செப்டம்பர் 30, அரிசோனா (World News): அமெரிக்காவில் உள்ள அரிசோனா (Arizona, United States of America) மாகாணத்தை சேர்ந்தவர் ரோபி ஜான்சன் (Roby Johnson). இவரின் மனைவி பெலிகானோ ஜான்சன் (Felicano Johnson). தம்பதிகள் இருவரும் கடந்த பல ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருகின்றனர்.

ரோபி ஜான்சன் அமெரிக்காவின் விமானப்படையில் பணியாற்றி வருகிறார். இதனால் விடுமுறைக்கு மட்டுமே வீட்டிற்கு வந்துசெல்வார். பிற நேரங்களில் அவர் பணியிடத்தில் இருப்பதால், வீட்டில் அவரின் மனைவி பெலிகானோ மட்டுமே இருப்பார்.

இந்நிலையில், மனைவியின் நடத்தையில் ஜான்சனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக சந்தேகப்பட்ட ஜான்சன், வீட்டின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் ரகசிய கேமிராக்களை நிறுவி இருக்கிறார். Assam Elephant Attack: காட்டுயானை விரட்டி தாக்கியதில் சோகம்: வனத்துறை அதிகாரி பரிதாப பலி., 3 பேர் காயம்.!

அதன்படி சோதித்தபோது, சம்பவத்தன்று கணவர் குடிக்க காபி எடுத்து வந்த மனைவி, அதில் எதையோ கலக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்துள்ளன. அப்போது சாமர்த்தியமாக காபியை குடிக்காமல் தவிர்த்த ரோபி ஜான்சன், தொடர்ந்து மனைவியின் செயல்பாடுகளை கண்காணித்து இருக்கிறார்.

பின் வீட்டில் சேமித்து வைக்கப்படும் நீரின் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தியபோது, அதில் அளவுக்கு அதிகமாக பிளீச்சிங் பவுடர் வேதிப்பொருள் கலக்கப்பட்டதும் உறுதியானது. கணவர் குடிக்கும் காபியில் இருந்து, அவர் குளிக்க செல்லும்போது பயன்படுத்தும் நீர், நீச்சல் குளத்திலும் பிளீச்சிங் பவுடர் அதிகமாக கலக்கப்பட்டுள்ளது. Ulunthurpet Shocker: நள்ளிரவில் கரும்புகை.. வீட்டிற்குள் உடல் கருகி பிணமாக இருந்த தந்தை-மகள்-பேத்திகள்.. உளுந்தூர்பேட்டையில் சோகம்.!

இவ்வுளவு உண்மைகளை அறிந்துகொண்ட கணவர் ரோபி ஜான்சன், காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக ஆதாரத்துடன் புகார் அளித்ததைத்தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. விசாரணையில், கணவரை கொலை செய்து, அவரின் பென்ஷன் தொகையை பெற்று ஆடம்பர வாழ்க்கை வாழ எண்ணிய மனைவி செய்த செயல் அம்பலமானது.

முதலில் கணவரிடம் விவாகரத்து கோரி மனைவி பெலிகானோ கோரிக்கை வைத்து வந்த நிலையில், அதில் விருப்பம் இல்லாத ரோபி மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்பின்னரே கொலை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. மனைவியின் செயல்பாடுகளில் சந்தேகமடைத்தவர் கேமிரா வைத்தபோது உண்மையும் அம்பலமாகி இருக்கிறது.

இதுகுறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் பெலிகானோவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிபதிகள் முன் சமர்ப்பிக்கப்பட்டு, அவர் சிறையில் அதிகபட்ச தண்டனையுடன் அடைக்கலப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.