Minor Girl Kidnap Attempt: அதிகாலையில் 4 பேர் கும்பலால் சிறுமி கடத்தல் முயற்சி; பதைபதைக்க வைக்கும் சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ..!
தனியாக நடந்து வந்த சிறுமியை இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கும்பல் கடத்த முயற்சித்த நிலையில், பொதுமக்களின் உதவியால் அவர் தப்பித்தார். பதைபதைப்பு சம்பவம் அங்கிருந்த கேமிராவில் விடியோவாக பதிவாகி இருக்கிறது.
செப்டம்பர் 23, பதோகி (Social Viral): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பதோகி மாவட்டம், மேற்கு த்ரிமுஹானி, மோத் சௌகி நகர் பகுதியில் இன்று அதிகாலை 05:00 மணியளவில் சிறுமி ஒருவர் சாலையில் தனியே நடந்து சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், சிறுமியிடம் பேச்சுக்கொடுத்துள்ளது. விபரீதத்தை புரிந்துகொண்ட சிறுமி நடந்துசென்றவாறு இருந்துள்ளார்.
இதனையடுத்து, இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கியவர்கள், சிறுமியை கடத்தி செல்ல முயற்சித்துள்ளனர். பதறிப்போன சிறுமி அலறியபடி அவ்வழியே சென்றவர்களிடம் உதவி கேட்டுள்ளார். Cigarette Ban on UK: இங்கிலாந்தில் சிகிரெட் விற்பனைக்கு தடை விதிக்க பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான அரசு முடிவு?: அதிரடி தகவல் இதோ.!
அங்கிருந்தவர்கள் சிறுமியை பாதுகாத்த நிலையில், அவர்களை மீறி கடத்தல் செயலுக்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் அடுத்தடுத்து வந்ததால் தோல்வியை சந்தித்தது. கடத்தல் கும்பல் சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.
சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் விரைந்து வந்து விசாரணை செய்தனர். குற்றவாளிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது. அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் சிறுமியை கடத்த முயற்சித்த வீடியோ பதிவாகியுள்ளது.