செப்டம்பர் 23, இலண்டன் (World News): சர்வதேச அளவில் வல்லரசு நாடுகளில் ஒன்றாக கருதப்படும் இங்கிலாந்தில், அந்நாட்டு அரசு விரைவில் புகையிலை பொருட்கள் மீதான தடையை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்தின் பிரதமராக பணியற்றவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தலைமையிலான அரசு இம்முயற்சியை மேற்கொண்டு இருக்கிறது.
இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலண்டனை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஒருமணிநேரத்திற்கு குறைந்தது ஒருவர் என கேன்சர் காரணமாக உயிரிழக்கின்றனர் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. புள்ளிவிபரப்படி ஆண்டுக்கு புகையிலையால் உண்டாகும் கேன்சர் நோய்வாய்ப்பட்டு 4,300 பேர் அங்கு உயிரிழக்கின்றனர். Tenkasi Crime: மனைவியின் கள்ளக்காதலன் கழுத்தை துண்டித்து கொலை; துள்ளத்துடிக்க நடந்த பயங்கரத்தை அதிர்ச்சி பின்னணி.!
ஒட்டுமொத்தமாக ஐரோப்பிய யூனியனை கணக்கில் எடுத்துக்கொண்டால் 74,600 பேர் கேன்சரின் காரணமாக உயிரிழக்கின்றனர். ஆண்கள் 14%, பெண்கள் 12% என்ற அளவில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். எதிர்காலத்தில் புகையிலை பழக்கத்தை தவிர்க்க வைக்கவும், நாட்டு மக்களின் உடல்நலனை மேம்படுத்தவும் இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, 2030க்குள் புகைப்பழக்கம் இல்லாத நாடு என்பதை உருவாக்க, 2009-க்கு பின் பிறந்தோருக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்க தேவையான சாத்தியக்கூறு மற்றும் சட்டத்தை அமல்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க பிரதமர் ரிஷி ஸுனக் தலைமையிலான அரசு தீவிரமாக முயன்று வருகிறது.