UP Shocker: நிச்சயிக்கப்பட்டு நின்றுபோன திருமணம்; ஆத்திரத்தில் இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற இளைஞன்..!
திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டு பின் தடைப்பட்டதால், தன்னை திருமணம் செய்ய வற்புறுத்திய இளைஞர் 19 வயது இளம்பெண்ணை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
ஜூன் 12, குறுகிராம் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள படவுன் பகுதியை சேர்ந்தவர் சூரஜ்பால். இவரின் மகன் ராம் குமார். இதே பகுதியில் வசித்து வரும் பெண்மணி நேஹா. ராம் குமாருக்கும் - நேஹாவிற்கும் (வயது 19) திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
பின்னாளில் பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்திவிடவே, நேஹாவின் மீது ஆசை கொண்ட ராம் குமார் திருமணம் தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், நேகா பெற்றோரின் முடிவை எதிர்க்க தயாராக இல்லை. US Rape: போதைப்பொருள் கொடுத்து 10 மாணவர்கள் பாலியல் பலாத்காரம்; கால்பந்தாட்ட பயிற்சியாளரின் பகீர் செயல்.. போனில் ஆபாச படங்கள்.!
இந்நிலையில், சம்பவத்தன்று ஆத்திரத்தில் இருந்த ராம் குமார், நேஹாவிடம் திருமணம் குறித்து வற்புறுத்தியும் பலன் இல்லை. இதனால் உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்றவர் நேகாவை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
கத்திக்குத்து காயத்துடன் இருந்த நேகாவின் இரத்தம் தரையில் ஓடி பரிதாபமாக பலியாகினார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நிகழ்விடத்தில் இருந்த ராம் குமாரின் தாய் தனது மகனை கண்டித்து செருப்பால் தாக்கிய வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
#Neha was murdered by adopting a knife in Mullahheda, #Gurgaon, #Haryana. Mother helplessly kept beating the killer alone. Neha was only 19 years old#BusAccident #Barkha pic.twitter.com/9Ym0mdoKOX
— प्रिया यादव (@yadav4priya) July 11, 2023
(The above story first appeared on LatestLY on Jul 12, 2023 10:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

