போதைப்பொருள் கொடுத்து 10 மாணவர்கள் பாலியல் பலாத்காரம்; கால்பந்தாட்ட பயிற்சியாளரின் பகீர் செயல்.. போனில் ஆபாச படங்கள்.!
Acccuse Camilo Hurtado Campos (Photo Credit: Twitter)

ஜூலை 12, டென்னிஸி (World News): அமெரிக்காவில் உள்ள டென்னிசி (Tennessee) மாகாணம், பிராங்கிளின் (Franklin) பகுதியை சேர்ந்த கால்பந்தாட்ட பயிற்சியாளர் 63 வயதுடைய கேம்லியோ ஹர்ட்ஆடோ காம்போஸ் (Camilo Hurtado Campos). இவர் சம்பவத்தன்று தனது செல்போனை உணவகத்தில் மறந்து விட்டு சென்றுள்ளார். அதனை கைப்பற்றிய நபரொருவர் காவல் துறையினரிடம் செல்போனை ஒப்படைத்துள்ளார்.

அதிகாரிகள் எதற்ச்சையாக கேம்லியோவின் செல்போனை ஆராய்கையில், அதில் 10 மாணவர்கள் பலாத்காரம் செய்யப்படும் வீடியோ இருந்துள்ளது. அதாவது, மாணவர்கள் சுயநினைவு இன்றி இருக்கும்போது, கேம்லியோ அவர்களை பலாத்காரம் செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன. Karnataka Shocker: தனது வேலைக்கு ஆப்பு வைத்த எம்.டி., சி.இ.ஓ கொடூரமாக கொலை; முன்னாள் ஊழியர் வெறிச்செயல்..!

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் எவ்வித பதற்றமும் இன்றி செல்போனை மீண்டும் பெற்றுச்செல்ல வந்த கேம்லியோவை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, மாணவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்தி பலாத்காரம் செய்த பகீர் உண்மை அம்பலமானது. அவரிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.