அக்டோபர் 13, புதுடெல்லி (New Delhi): இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில், காற்று மாசு (Air Pollution) தொடர்பான பிரச்சனை என்பது கடுமையாக இருக்கும். டெல்லியை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
இதனால் அறுவடை காலங்கள் நிறைவு பெற்றதும், வயலில் இருக்கும் எஞ்சிய பொருட்கள் அனைத்தும் காய்ந்த பின்னர் விவசாயிகளால் தீ வைத்து கொளுத்தப்படும். இந்த விஷயத்தால் கிளம்பும் புகை, காற்றில் நகர்ந்து புதுடெல்லியை சென்றடையும். Chennai Shocker: குடிப்பழக்கத்தை கண்டித்த 5 மாத கர்ப்பிணி மனைவி எரித்துக்கொலை; கை-கால்களை உடைத்து காதல் கணவன் வெறிச்செயல்.!
அதேபோல, நகரில் அதிகரித்து காணப்படும் வாகன நெரிசல், கட்டுமான பணிகள், தொழிற்சாலைகள் என புதுடெல்லியின் (Delhi Air Quality) இயல்பு காற்று மாசோடு, இக்காற்றுகளும் இணைந்துகொண்டால் கடுமையான காற்று மாசு மக்களுக்கு எஞ்சியிருக்கும்.
தற்போது புதுடெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து உள்ளது. தற்போது குளிர்காலம் என்பதால் வெப்பநிலை குறைந்து 19.8 டிகிரி வெப்பம் பதிவாகி வருகிறது. பகல் வேளைகளில் வெப்பநிலை 36 டிகிரி வரை செல்லும்.
இந்நிலையில், காற்றின் தரம் காலை 9 மணி நிலவரப்படி 237 AQI என்ற நிலைமையில் இருந்தது. இது மிகவும் மோசமான தரம் கொண்ட காற்று அளவை வெளிப்படுத்தும் அளவு ஆகும். அதேவேளையில், டெல்லியின் காற்று ஈரப்பதம் என்பது காலை 08:30 நிலவரப்படி 80% இருந்தது.
ஒட்டுமொத்த டெல்லியில் காற்றின் தரம் என்பது 190 AQI ஆகவும், டெல்லி பல்கலைக்கழகத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமாக 313 AQI ஆகவும், நொய்டாவில் 212 AQI ஆகவும் இருந்தது.