Viral Video: நண்பர்களுடன் கைகோர்த்து ஆபத்தை விலைக்கு வாங்கும் இளசுகள்; அதிர்ச்சி வீடியோ வைரல்.!

வாகனங்களில் நாம் பயணம் செய்வதில் சிறு அலட்சியம் கூட நமது உயிரை பறிக்கும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

Viral Video: நண்பர்களுடன் கைகோர்த்து ஆபத்தை விலைக்கு வாங்கும் இளசுகள்; அதிர்ச்சி வீடியோ வைரல்.!
Students Dangerous Travelling (Photo Credit: Twitter)

ஜூலை 14, கண்னுஜ் (Trending Video): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கண்ணுஜ் பகுதியில் இன்று மாணவர்கள் பள்ளிக்கு சென்றுகொண்டு இருந்தனர். காலை 06:30 - 07:00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இவர்கள் தங்களின் மிதிவண்டியில் பள்ளிக்கு சென்றுள்ளார்கள்.

அப்போது, அவ்வழியே பயணம் செய்த மற்றொரு நண்பர் மோட்டார் வாகனத்தில் பயணம் செய்ய, அவரின் உதவியுடன் வாகனத்தில் இருந்தவரின் கைகளை 4 சைக்கிளில் சென்றவர்கள் அடுத்தடுத்து கைப்பற்றியவாறு பயணம் செய்தனர். IND Vs WI: முதல் இன்னிங்சில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி; பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் திணறிய வெஸ்ட் இண்டீஸ்.! 

ஆபத்தான பயணத்தை எவ்வித புரிதலும் இன்றி நண்பர்கள் அனைவரும் தங்களுக்குள் பேசி பயணம் செய்துள்ளனர். இந்த நிகழ்வை விடியோவாக எடுத்த மற்றொரு வாகன ஓட்டி, அதனை இணையப்பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

இதனையடுத்து, வீடியோ உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு செல்லவே, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வாகனங்களில் நாம் பயணம் செய்வதில் சிறு அலட்சியம் கூட நமது உயிரை பறிக்கும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

(The above story first appeared on LatestLY on Jul 14, 2023 01:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).