ஜூலை 14, வெஸ்ட் இண்டீஸ் (Cricket News): மேற்கிந்திய தீவுகளில் - இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவில் உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஓடிஐ உட்பட 10 போட்டிகளில் விளையாடுகிறது.
மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் போட்டிகளை முடித்துக்கொண்டு இந்திய அணி சுதந்திர தினத்திற்கு முன்பு தாயகம் திரும்புகிறது. நேற்று விண்ட்ஸர் பார்க் டொமினிகா (Windsor Park (Dominica) கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி மோதிக்கொண்டன. Suraikai Benefits: எந்த நேரமும் கணினி, செல்போன் வைத்து வேலை பார்ப்பவரா நீங்கள்?.. கண் பிரச்சனையை சரியாக்க எளிய வழி.!
முதல் இன்னிங்சில் டாஸை வென்று பேட்டிங் தேர்வு செய்த மேற்கிந்திய அணி, 64.3 ஓவரில் தனது 10 விக்கெட்டையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. மறுமுனையில் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் நின்று ஆடி அணிக்கு ரன்களை வாரிக்குவித்தனர்.
ஜெய்ஷ்வால் 350 பந்துகளில் 143 ரன்களை குவித்தார். ரோஹித் ஷர்மா 221 பந்துகளில் 103 ரன்களை எடுத்திருந்தார். விராட் கோலி 96 பந்துகளில் 36 ரன்களை எடுத்திருந்தார். அன்றைய முடிவில் இந்திய அணி 113 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 312 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி 162 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.