Tractor Overturned: குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து கோர விபத்து... 8 குழந்தைகள் உட்பட 15 பேர் பலி., மாசி மகத்துக்கு நீராட சென்றவர்கள் மரணம்.!
குளத்திற்கு அருகே சென்ற வாகனம் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் சிக்கி 15 பேர் பலியாகி இருக்கின்றனர்.
பிப்ரவரி 24, கஸ்கஞ்ச் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கஸ்கஞ்ச் மாவட்டம், அலிகர் மலைத்தொடர், ஷலப் மாத்தூர் கிராமத்தில் இன்று மகா பூர்ணிமாவை (மகம்) முன்னிட்டு, டிராக்டரில் 20 க்கும் மேற்பட்டோர் கங்கையில் நீராட புறப்பட்டு சென்றுள்ளனர். இவர்கள் செல்லும் வழியில் டிராக்டர் திடீரென குளத்தில் தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டரில் சென்ற பலரும் பலியாகி இருக்கின்றனர். TV Anchor Kidnaped for Marriage: பிரபல தனியார் டிவி தொகுப்பாளர் மீது ஒருதலைக்காதல்; இளைஞரை கடத்தி திருமணத்திற்கு முயற்சித்த இளம்பெண் கைது.!
15 பேர் பலி: விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையின்படி, 8 குழந்தைகள் உட்பட 15 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விசயம் குறித்து அதிகாரிகள் விசாரணையும் நடத்தி வருகின்றனர். Shocking Video: பேருந்தின் நடுவே அமர்ந்து மகிழ்ச்சியாக மதுகுடிக்கும் குடிகார கூட்டம்; அதிர்ச்சி வீடியோ வைரல்.!
மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
UP के जिला कासगंज में बड़ा हादसा -
तालाब में पलटी ट्रैक्टर-ट्रॉली। करीब 15 लोगों की मौत हुई। ये सभी लोग आज गंगा स्नान के लिए जा रहे थे। तालाब से अस्पताल तक लाशों का ढेर लगा।
🚨 Sensetive Media pic.twitter.com/4Lxer1P3oz
— Sachin Gupta (@SachinGuptaUP) February 24, 2024
(The above story first appeared on LatestLY on Feb 24, 2024 01:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

