ஜூலை 11, காசியாபத் (Ghaziabad): டெல்லி - மீரட் விரைவுச்சாலை (Delhi Meerut Expressway Accident) இந்தியாவின் மிகப்பெரிய விரைவு சாலைகளில் ஒன்றாகும். இந்நிலையில், இன்று பள்ளி வாகனம் ஒன்று மாணவர்களை ஏற்றுக்கொண்டு பயணம் செய்தது.
இந்த பள்ளி பேருந்து தவறாக எதிர்திசை சாலையில் அதிவேகமாக பயணம் செய்த நிலையில், அவ்வழியே வந்த காருடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. TN Police Suicide: விடுமுறை கிடைக்காததால் குடும்பத்தில் விரிசல்; விரக்தியில் உயிரை மாய்த்த இளம் காவலர்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி.!
இவ்விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
பேருந்து எதிர்திசையில் பயணம் செய்து காருடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளான சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல்கியுள்ளன. பேருந்து ஓட்டுனருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
WATCH - School Bus-SUV Crash On Delhi-Meerut Expressway Near Ghaziabad, 6 Dead.#BusAccident #Ghaziabad #DelhiMeerutExpressway pic.twitter.com/djl7m4CZRp
— TIMES NOW (@TimesNow) July 11, 2023