Aged Couple Killed: குடும்பச்சண்டையில் புதுமணப்பெண் தற்கொலை; ஆத்திரத்தில் மாமனார்-மாமியாரை எரித்துக்கொன்ற பெண்வீட்டார்.!

கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்று முடிந்த பெண்மணி திடீரென தற்கொலை செய்துகொண்ட காரணத்தால், ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மாப்பிள்ளையின் பெற்றோரை எரித்துக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

Aged Couple Killed: குடும்பச்சண்டையில் புதுமணப்பெண் தற்கொலை; ஆத்திரத்தில் மாமனார்-மாமியாரை எரித்துக்கொன்ற பெண்வீட்டார்.!
Prayagraj Aged Couple Murder Case (Photo Credit: @SachinGuptaUP X)

மார்ச் 19, ப்ரயக்ராஜ் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ப்ரயக்ராஜ் மாவட்டம், சாட்டி சவுரா பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர கேஷர்வானி (வயது 64). இவரின் மனைவி ஷோபனா தேவி (வயது 62). தம்பதிகளுக்கு (Prayagraj Aged Couple Burn Alive) அன்ஷு கேஷர்வானி என்ற மகன் இருக்கிறார். இளைஞரான அன்ஷுவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த பெற்றோர், அதே பகுதியை சேர்ந்த 21 வயது பெண்மணி அன்ஷிகா கேஷர்வானியுடன் நிச்சயம் செய்துள்ளனர்.

புதுமணப்பெண் தற்கொலை: கடந்த பிப்ரவரி மாதம் தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. புதுமண தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில், புதுமணப்பெண் ஷோபனாவை அன்ஷு மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததாக தெரியவருகிறது. இதனால் மனமுடைந்து இருந்த அன்ஷிகா, தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்தார். இந்த விஷயம் குறித்து அன்ஷிகாவின் பெற்றோருக்கு தகவல் தெரியவந்துள்ளது. Obama Meets England PM Rishi: பராக் ஒபாமா - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேரில் சந்திப்பு.. காரணம் என்ன?.. விபரம் இதோ.! 

உயிருடன் கொளுத்தப்பட்ட மாமனார் - மாமியார்: மகளின் தற்கொலையை அறிந்து ஆத்திரமடைந்த அன்ஷிகாவின் பெற்றோர், சம்பந்தியின் வீட்டிற்கு உறவினர்களுடன் சென்று தகராறு செய்துள்ளனர். ஒருகட்டத்தில் பெண் தரப்பினர் ஷோபனா தேவி மற்றும் ராஜேந்திர கேஷர்வானி ஆகியோரை வீட்டிற்குள் பூட்டி தீவைத்து கொளுத்தி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் இருவரும் உயிருடன் எரிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

காவல்துறையினர் விசாரணை: தற்கொலை மற்றும் கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த முத்திங்கஞ்ச் காவல் துறையினர், அன்ஷிகா கேசர்வானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உயிருடன் கொளுத்தப்பட்ட அவரின் மாமனார் - மாமியார் உடல் கருகி சடலமாக மீட்கப்பட்டனர். மூவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Mar 19, 2024 11:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).