மார்ச் 19, இலண்டன் (World News): அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா (Barak Obama), ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இதன் ஒருபகுதியாக அவர் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்கை (Rishi Sunak), அவரின் பிரதமர் இல்லத்தில் வைத்து சந்தித்தார். இந்த சந்திப்பு தனிப்பட்ட சந்திப்பு என கூறப்பட்ட நிலையில், இருவரும் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக விவாதித்தாக தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர் பிரதமரின் செய்தித்தொடர்பாளர் பேசுகையில், ஒபாமா அறக்கட்டளை பணிகள் தொடர்பான விவாதித்ததாக தெரிவித்தார். SpaceX Falcon 9 Rocket: வானில் திடீரென மர்மமாக தோன்றிய உருவம்; அதிர்ந்துபோன மக்கள்.. நடுவானில் நடந்தது என்ன?..!
ஒபாமாவின் உலக பயணம்: இலாப நோக்கமற்ற ஒபாமா அறக்கட்டளை கடந்த 2014ம் ஆண்டு முதல் பல்வேறு மக்களுக்கான பணிகளை செய்து இருக்கிறது. அதுதொடர்பான விவாதத்திற்கு இருவரும் சந்தித்து இருக்கின்றனர். கிட்டத்தட்ட ஒருமணிநேரம் இருவரின் சந்திப்பும் நீடித்தது. தற்போது அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒபாமா உலக தலைவர்களுடன் சந்திப்பு நடத்துவது அரசியல் மட்டத்தில் பல விவாத கேள்விகளை அங்கு உண்டாக்கி இருக்கிறது. மேலும், அமெரிக்காவின் அதிபராக ஒபாமா பணியாற்றிய காலத்தில், அவருடன் தற்போதைய அதிபர் ஜோ பிடன் பணியாற்றி இருக்கிறார்.
BREAKING: Barack Obama arrives at Number 10 in UK for an undisclosed private meeting pic.twitter.com/I7WleeOQqg
— Insider Paper (@TheInsiderPaper) March 18, 2024