Wife Brutally Kills Husband: கணவனின் மண்டையை பிளந்து கொடூர கொலை; நடுரோட்டை இரத்தக்கிளறியாக்கிய மனைவி..!
நெஞ்சை நடுநடுங்க வைக்கும் வகையிலான கொலை சம்பவம் ஒன்று உ.பி மாநிலத்தில் நடந்துள்ளது. குடும்பச்சண்டையில் நடந்த கொடூர கொலை சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஆகஸ்ட் 09, ஷாஜஹான்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூர் (Shahjahanpur) மாவட்டம், ஹதுரா புசுர்க் கிராமத்தில் வசித்து வருபவர் சத்ய பால் (வயது 40). இவரின் மனைவி காயத்ரி தேவி. தம்பதிகள் இருவருக்கும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்களுக்கு ரோஹித் என்ற மகனும், டோலி என்ற மகளும் இருக்கின்றனர்.
தம்பதிகளுக்குள் வாக்குவாதம்:
தம்பதிகளுக்கு இடையே அவ்வப்போது தகராறு நடப்பது, பின் அவர்கள் சமாதானம் அடைவது வழக்கமான ஒன்று என கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமையான நேற்று மதியம் 02:30 மணியளவில், வீட்டில் இருந்த தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்த வாக்குவாதத்தில் இருவரும் தூக்கிக்கொண்டு கைகலப்பில் ஈடுபட்டு இருக்கின்றனர். Wayanad Earthquake: நிலச்சரிவை தொடர்ந்து, வயநாட்டில் நில அதிர்வு; மக்கள் வீதிகளில் தஞ்சம்..!
மக்கள் முன்னிலையில் கொடூர கொலை:
ஒருகட்டத்தில் இருவரும் வீட்டின் வாசலில் சண்டையிட்ட நிலையில், மனைவி தனது கையில் கிடைத்த செங்கலை எடுத்து கணவரை கடுமையாக தாக்கி இருக்கிறார். கணவரின் தலையில் சரமாரியாக தாக்கியதில், அவரின் மண்டை கூடு உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. அதில் கைகளை வைத்து குத்தி கொடூரமாக கொலை செய்த மனைவி, ஆத்திரம் தீர்ந்ததும் அங்கிருந்து எழுந்து வந்தார்.
காவல்துறைனர் விசாரணை:
காவல் அதிகாரிகள் முன்னிலையிலேயே நடந்த இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதனை அவ்வழியே பயணித்தவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார். உடனடியாக சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்த காவல்துறையினர், அவரை சிறையில் அடைத்தனர். மேலும், சத்யபாலின் உடல் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.