ஆகஸ்ட் 08, வயநாடு (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டம் (Wayanad Landslide), அட்டமலை, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மிகப்பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 3 கிராமங்களில் இருந்த வீடுகள், கடைகள் என முற்றிலும் சேதமடைந்த நிலையில், வீட்டில் இரவில் உறங்கிக்கொண்டு இருந்த மக்களில் 56 குழந்தைகள் உட்பட 406 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 150 பேரின் நிலைமை தெரியவில்லை.
மீட்பு பணிகளில் களமிறக்கப்பட்ட இராணுவம்:
கடந்த 10 நாட்களாக இந்திய இராணுவம், மீட்பு படையினர் இணைந்து களத்தில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு படிப்படியாக திரும்பி வருகிறது. கடந்த 2019 தென்மேற்கு பருவமழைகுப்பினர், 2024ல் கேரளாவில் நடந்த மிகப்பெரிய துயரமாக வயநாடு நிலச்சரிவு சம்பவம் நடந்துள்ளது. Sikkim Earthquake: சிக்கிமில் இன்று 4.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்..!
நென்மேனி (Nenmeni Village) பகுதியில் நிலம் அதிர்வு:
இந்நிலையில், கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டம், நென்மேனி பகுதியிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பலரும் வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள பகுதிகளில் இருக்கும் பள்ளி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் நேரில் ஆய்வு:
இந்த விஷயம் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையினர் நிகழ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில அதிர்வை உணர்ந்ததாக கூறிய நென்மேனி பகுதியில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.