Vlogger Couple Sexually Harassed: திருச்சூர் பூரம் திருவிழாவில் அமெரிக்க பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை; வெளியான வீடியோவால் பரபரப்பு.!

கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழாவில், அமெரிக்க விலாக்கர்ஸ் மெக்கென்சி மற்றும் கீனன் ஜோடிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

Vlogger Couple Sexually Harassed: திருச்சூர் பூரம் திருவிழாவில் அமெரிக்க பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை; வெளியான வீடியோவால் பரபரப்பு.!
Vlogger Couple Sexually Harassed in Kerala (Photo Credit: Instagram)

ஏப்ரல் 26, திருச்சூர் (Thrissur News): கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழா சர்வதேச அளவில் புகழ் பெற்றது. திருச்சூர் பூரம் திருவிழாவில் யானைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். 50-க்கும் மேற்பட்ட யானைகள் அலங்கரிக்கப்பட்டு முத்துக்குடை பரிமாறும் 36 மணிநேர திருவிழாவும் வாணவேடிக்கையும் புகழ் பெற்றது. இத்திருவிழாவை காண வெளி மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். Heat Stroke: அக்னி வெயிலின் ஆட்டம் ஆரம்பம்.. ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை..!

அதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த மெக்கென்சி மற்றும் கீனன் ஜோடிகள் விழாவைக் காண வந்துள்ளனர். இவர்கள் விலாக்கர்ஸ் ஆவார். இந்நிலையில் இவர்கள் வீடியோ எடுக்கும் போது, மெக்கென்சிக்கு ஒருவர் முத்தம் கொடுக்க வந்துள்ளார், மற்றொருவர் கீனன்யின் அந்தரங்க உறுப்பைத் தொட்டுள்ளார். இத்தகைய பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இந்த ஜோடிகள் (Vlogger Couple Sexually Harassed) அவர்களது அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோவானது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. மேலும் இதுகுறித்து தம்பதிகள் எந்தவோரு புகாரும் அளிக்கவில்லை என்று கேரள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இச்சம்பவமானது ஏப்ரல் 19 அன்று நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by UNSTUK with Mac & Keen (@macnkeen)

(The above story first appeared on LatestLY on Apr 26, 2024 03:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).