ஏப்ரல் 26, புதுடெல்லி (New Delhi): ஹீட் (Heat) ஸ்ட்ரோக்கின் போது உடலின் வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் அதிகரிக்கலாம். இதனால் நம்முடைய உடல் சாதாரண வெப்பநிலையை கையாள முடியாத நிலைக்கு தள்ளப்படும். பொதுவாக அதிக வெப்பநிலையை நமது உடல் வியர்வையின் மூலம் தான் சமநிலைக்கு கொண்டு வரும். ஆனால் இச்சமயத்தில் நமது உடல் அதனை செய்யாது. இதுபோன்று உடலில் வெப்பம் அதிகரித்தால் மரணம் கூட நேரலாம்.

அறிகுறிகள்: உடலில் அதிகமான வெப்பநிலை ஏற்படும் பொழுது தண்ணீர் தாகம் எடுக்கும், உதடு காய்ந்து நாக்கு வறண்டு போகும், உடலில் வியர்வையை இருக்காது, தலைவலி, வாந்தி, வயிற்று வலி, தலை சுற்றல் போன்றவைகள் ஏற்படும், பல்ஸ் பிபி குறையும். எனவே இந்த உடலை வெப்பநிலை அதிகரிப்பதால் சிலர் கோமாவிற்கே செல்ல நேரும். International Chernobyl Disaster Remembrance Day 2024: சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவு தினம்.. அதன் வரலாறு தெரியுமா?.!

தப்பிப்பதற்கான வழிகள்: இதனால் தான் வயதானவர்கள் மற்றும் சிறிய குழந்தைகள் மதிய நேரங்களில் வெளிவருவதை தவிர்க்க வேண்டும். இந்தக் கோடை காலத்தில் பருத்தி அல்லது தளர்த்தியான ஆடைகளை அணிய வேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் ஆவது குடிக்க வேண்டும். மேலும் ஹீட் ஸ்ட்ரோக் (Stroke) ஏற்பட்டவர்களுக்கு அக்குள் மற்றும் இடுப்பு பகுதிகளில் ஐஸ் கட்டிகளை வைக்க வேண்டும். உங்கள் உடலில் நீர் சத்து குறையாமல் தொடர்ந்து பாதுகாத்துக் கொண்டே இருங்கள்.