Bajaj CNG Bike Teased: உலகின் முதல் சிஎன்ஜி பைக்.. பஜாஜ் வெளியிட்ட டீசர்..!
பஜாஜ் நிறுவனம் வரும் 5ம் தேதி தனது முதல் சிஎன்ஜி பைக்கிற்கான டீசரை வெளியிட்டுள்ளது.
ஜூலை 03, புதுடெல்லி (New Delhi): பஜாஜ் (Bajaj) நிறுவனம் குறைந்த விலையில் எளிய மக்களுக்கான வாகனங்களை தயாரிக்கும் சிறந்த நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை அடுத்த காலாண்டுக்குள் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. பஜாஜ் நிறுவனம் வரும் 5ம் தேதி தனது முதல் சிஎன்ஜி பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்திருந்த நிலையில், இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் முதல் காட்சியாக இந்த பைக்கின் சில்லவுட் லுக் இருக்கிறது. இதை பார்க்கும் போது இந்த பைக் ஓரளவு சிம்பிளான பைக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் இந்த பைக்கின் விலையை பொறுத்தவரை ரூபாய் 90,000 குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. TN Weather Update: வீசப்போகும் சூறாவளி.. மீனவர்களுக்கு அலர்ட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!