அக்டோபர் 06, சென்னை (Automobiles News): யமஹா நிறுவனத்தின் பிரீமியம் பைக்குகளான R3 மற்றும் MT-03 விலையை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை அளித்துள்ளது. சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்திய ஜிஎஸ்டி வரி மாற்றங்கள் 350 சிசிக்கு குறைவான இருசக்கர வாகனங்களுக்கும் பொருந்தும். அதன்படி வரி விகிதம் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனிடையே யமஹா நிறுவனம் தனது பிரீமியம் வகை மாடல்களின் விலையை ரூ.20,000 வரை குறைத்து அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி விகித குறைவின் எதிரொலி:
R3 மற்றும் MT-03 இரு மாடல்களிலும் 350ccக்கு குறைவான எஞ்சின் பயன்படுத்தப்படுவதால், சுமார் ரூ.20,000 வரை விலை குறைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த விலை மாற்றம் 2025 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜிஎஸ்டி வரி விகிதம் குறைந்ததால் மீண்டும் விலை குறைக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு அறிமுகமான இந்த இரு மாடல்களும் 321சிசி டபுள் பிஸ்டல் இன்ஜின், வலிமையான பிக்கப் திறன் மற்றும் உயர்தர கட்டமைப்பை கொண்டவை ஆகும். Comet AI Browser: குரோமுக்கு போட்டியாக களமிறங்கியது Comet ப்ரவுசர்.. வசதிகள் ஏராளம்.. இப்போதே ட்ரை பண்ணுங்க.!
R3 மற்றும் MT-03 சிறப்பம்சங்கள்:
இந்த இரண்டு பைக்குகளிலும் 321 சிசி திறன் கொண்ட என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் லிக்யூடு கூல்டு பாரல்லல் டவின் மோட்டார் ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 41.4 பிஎச்பி பவரையும், 29.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த பைக்குகளில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், எல்இடி ஹெட்லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், எல்இடி ஹெட்லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
யமஹா இருசக்கர வாகன விலை:
பல போட்டி மாடல்களை ஒப்பிடும் போது இவை தனித்துவமான நிலையைப் பெற்றுள்ளன. சக்தி வாய்ந்த செயல் திறனும் இந்த மாடல்களை ப்ரீமியம் வகையில் முன்னிறுத்தியுள்ளது. இந்த விலை குறைப்பு ப்ரீமியம் பைக்குகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது. அதன்படி யமஹா நிறுவனத்தின் யமஹா R3 பைக்கின் விலை 3.39 லட்சமாகவும், யமஹா MT-03 பைக்கின் விலை 3.30 லட்சமாகவும் (எக்ஸ் ஷோரூம் விலைப்படி) விற்பனை செய்யப்படுகிறது.