Punjabi Singer Rajvir Jawanda Dies (Photo Credit : @Malkeet009 X)

அக்டோபர் 08, புதுடெல்லி (New Delhi News): பஞ்சாப் மாநிலம் லூதியானா, ஜாக்ரோன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்வீர் ஜவாண்டா (Punjabi Singer Rajvir Jawanda). இவர் து டிஸ் பெண்டா, குஷ் ரேஹா கர், சர்தாரி, பேமிலி நேம், அஃப்ரீன், டவுன் டு எர்த், மற்றும் கங்கானி போன்ற ஹிட் படங்களின் பாடலுக்காக நன்கு அறியப்பட்டார். சுபேதார் ஜோகிந்தர் சிங் (2018), ஜிந்த் ஜான் (2019), மற்றும் மிண்டோ தசீல்தர்னி (2019) ஆகிய பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்துள்ளார். Bigg Boss Shutdown: கழிவுநீர் கூட போக வழியில்லையா?.. விதிகளை மீறிய பிக் பாஸ் ஸ்டுடியோவை இழுத்து மூட உத்தரவு.!

விபத்தில் சிக்கி உயிரிழந்தார்:

35 வயதாகும் பாடகர் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள சோலன் மாவட்டம் சிம்லா நோக்கி பயணம் செய்தார். அப்போது, எதிர்பாராத விதமாக வாகன விபத்தில் சிக்கினார். இதனால் அவரின் தலை, முதுகெலும்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தைத்தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்தவர் இன்று (அக்.07) பரிதாபமாக உயிரிழந்தார். கிட்டத்தட்ட 11 நாட்கள் அவரின் உயிர் போராடி பிரிந்துள்ளது. இந்த தகவல் அவரது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபி பாடகர் ஜவாண்டா விபத்தில் சிக்கிய வீடியோ (Punjabi Singer Rajvir Jawanda Bike Accident Video):