Tenkasi Vallam Bike Accident (Photo Credit: @NewsTamil24X7 / @ajay_joice X)

அக்டோபர் 09, வல்லம் (Tenkasi News): தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் சிக்கிய 11ஆம் வகுப்பு பயின்று வரும் 16 வயதுடைய மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் இரண்டு நாட்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மாணவியுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர், விபத்தில் சிக்கியது தனது காதலி என அங்கிருந்தவர்களிடம் அடையாளப்படுத்தி இருக்கிறார். நாளைய வானிலை: இன்றும், நாளையும் பொளக்கப்போகும் கனமழை.. இந்த மாவட்டங்கள் உஷார்.! 

விபத்தில் சிக்கி பரிதாபமாக மரணம்:

இதனையடுத்து, விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து, இளைஞரிடமும் விசாரணை நடைபெற்றது. அப்போது, அவர் வல்லம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ரமேஷ் என்பதை உறுதி செய்துள்ளனர். இதனிடையே, மாணவியின் தந்தை செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். தோழி வீட்டுக்கு சென்று வருவதாக கூறிய தனது மகள் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இந்த விபத்து திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மகளை 24 வயதுடைய இளைஞர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு:

இந்த புகாரின் பேரில் ரமேஷின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மது போதையில் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ரமேஷை கைது செய்தனர். முதலில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய மறுப்பு தெரிவித்ததால், மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிவேகத்தில் வந்ததால் சாலையில் நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டது தொடர்பான காணொளி வைரலாகி வருகிறது.

விபத்து நடந்தபின் எடுக்கப்பட்ட பதறவைக்கும் காணொளி: