Hero Maverick 440: செம பைக்கை அறிமுகப்படுத்திய ஹீரோ.. இனி டெலிவரி ஆரம்பம்..!

ஹீரோ மோட்டோகார்ப்நிறுவனம் வெகு விரைவில் அதன் புதுமுக பைக் மாடலான மேவ்ரிக் 440ன் டெலிவரி பணிகளை இந்தியாவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Hero Maverick 440: செம பைக்கை அறிமுகப்படுத்திய ஹீரோ.. இனி டெலிவரி ஆரம்பம்..!
Hero Maverick 440

ஏப்ரல் 12, புதுடெல்லி (New Delhi): ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் (Hero) தனது ஃப்ளாக்ஷிப் பைக்காக மேவரிக் 440 (Mavrick 440) என்ற பைக்கை அப்பர் பிரிமியம் செக்மெண்டில் அறிமுகப்படுத்தியது. இதன் டெலிவரி பணிகள் வரும் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த பைக் பேஸிக் வேரியன்டை பொறுத்த வரை ரூபாய் 1.99 லட்சம் விலையிலும், மிட் வேரியன்ட் ரூபாய் 2.14 லட்சம் விலையிலும் டாப் வேரியன்ட் ரூபாய் 2.24 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக் அலாய் வெர்ஷனில் மொத்தம் 187 கிலோ எடை கொண்டது ஸ்போக் வீலில் மொத்தம் 191 கிலோ எடை கொண்டது. மொத்தம் 13.5 லிட்டர் கொண்ட பெட்ரோல் டேங்க்கை கொண்டதாக இந்த பைக் இருக்கிறது. Moto G64 5G Launch: "நண்டு சிண்டுலாம் புது மொபைல் விடுது.. முன்னோடி நான் விடமாட்டேனா.." மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு..!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 12, 2024 06:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).