ஏப்ரல் 12, புதுடெல்லி (New Delhi): மோட்டோ ஜி64 5ஜி (Moto G64 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த போன் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 சிப்செட் (MediaTek Dimensity 7025 SoC) வசதியைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன். United Nations Warns: அனல்பறக்க வெளுத்து வாங்கப்போகும் வெப்பஅலை: குழந்தைகளை பாதுகாக்க ஐ.நா அறிவுறுத்தல்., பெற்றோர்களே கவனம்.!
மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும். இந்த போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போன் 6000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். அதுமட்டுமின்றி இந்த புதிய மோட்டோ ஜி64 5ஜி போன் ஆனது ரூ.20,000-க்குள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.